வகைப்பாட்டியல்

Deal Score0

வகைப்பாட்டியல் (Taxanomy):

செயற்கை முறை வகைப்பாடு

 

  • இது ஒன்று அல்லது ஒரு சில வெளிப்புறப் பண்புகளை அடிப்படையாகக் கொண்டது.
  • 1753 ல் ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ், ஸ்பீஸிஸ் பிளாண்டாரம் என்ற நூலினை வெளியிட்டார் இதில் அவர் 7,300 சிற்றினங்களை விவரித்துள்ளார்.
  • மகரந்தத்தாள்களின் எண்ணிக்கை, இணைவு, நீளம் மற்றும் மகரந்தத்தாளின் பல்வேறு பண்புகளின் அடிப்படையில், லின்னேயஸ் தாவரங்களை 24 வகுப்புகளாகப் பிரித்துள்ளார். இந்த வகைப்பாடு இனப்பெருக்க வகைப்பாடு எனவும் அழைக்கப்படும்.
  • லின்னேயஸ் காலகட்டத்தில் இந்த வகைப்பாடு பிற வகைப்பாடுகளை விட முக்கியமானதாக கருதப்பட்டது. லின்னேயஸ் வகைப்பாட்டில் மலரின் பண்புகள் இடம் பெற்றிருப்பது. மிக முக்கியமான தொன்றாகும்.
  • எடுத்துக்காட்டாக ஒரு வித்திலைத் தாவர வகுப்பைச் சேர்ந்த சிஞ்ஜிஃபெரேசி தாவரங்களும், இருவித்திலைத் தாவர வகுப்பைச் சேர்ந்த அனகார்டியேசி தாவரங்களும் ஒரே ஒரு மகரந்தத்தாளைப் பெற்றிருப்பதால் இவ்விருவேறு குடும்பத் தாவரங்களும், இவ்வகைப்பாட்டின் மோனாண்ட்ரியா வகுப்பில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
  • வெவ்வேறு பிரிவுகளில் உள்ள தாவரங்களின் இயற்கை அல்லது மரபுவழி தொடர்புக்கு எந்த முக்கியத்துவமும் இவ்வகைப்பாட்டில் கொடுக்கப்படவில்லை என்பது மற்றொரு குறையாகும்.
Click Here To Get More Details