வகைப்பாட்டியல்

Deal Score+4

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

வகைப்பாட்டியல்

Taxonomy 

  • வகைப்பாட்டியல்
  • பாக்டீரியாவின் கண்டுபிடிப்பு
  • புரோடிஸ்டா உலகம்
  • பூஞ்சைகள் உலகம்
  • தாவர உலகம்
  • விலங்கு உலகம்
  • இரு சொற் பெயரிடுமுறை

வகைப்பாட்டியல்

வகைப்பாட்டியல்

  • பூமியில் காணப்படும் உயிரினங்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. அவற்றின் அளவு, வடிவம், வாழுமிடம், உணவு ஊட்டமுறை மற்றும் உடற்செயலியல் நிகழ்ச்சிகள் ஆகிய பல பண்புகளில் அவைகள் வேறுபட்டுள்ளன.
  • பல்வேறு உயிரினங்களில் காணப்படும் இவ்வேறுபாடுகளைப் பல்லுயிர்த் தன்மை என்கிறோம்.
  • உயிரினங்கள் தமக்கிடையே பல்வேறு வேறுபாடுகளைக் கொண்டிருந்தாலும் அடிப்படையில் சில பொதுவான ஒத்த பண்புகளை கொண்டிருக்கின்றன.
  • இவ்வொத்த பண்புகளின் அடிப்படையில் பல்வேறு குழுக்களாகப் பிரிக்க முடிகிறது. இவ்வுயிரினங்கள் அனைத்தையும் முறையாக அறியும் வகையில் அனைத்து தாவரங்களும் விலங்குகளும் பலவகைக் குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
  • உயிரினங்களில் காணப்படும் ஒற்றுமை மற்றும் வேற்றுமைகளின் அடிப்படையில் அவைகளை வகைப்படுத்துதல் தொடர்புடைய உயிரியலின் ஒரு பிரிவே வகைப்படுத்துதல் எனப்படும்.

வகைப்படுத்துதலின் இன்றியமையாமை

  • அனைத்து உயிரினங்களையும் அறிதல் என்பது இயலாது ஆனால், இவ்வுயிரினங்களை ஒரு குறிப்பிட்ட வசதியான முறையில் குழுக்களாக்கப்பிரித்து ஆராய்ந்தால் அவற்றைப் பற்றி அறிவது எளிதாகிறது. பல்லுரித் தன்மையைடி அறிந்து கொள்ளுதல் வகைப்படுத்துதலின் மூலம் எளிதாகிறது.

 வகைப்படுத்துதலின் அவசியம்

  • உயிரினங்களை எளிதாக இனம் கண்டறிய வகைப்படுத்துதல் பயன்படுகிறது
  • பல்வேறு தாவர, விலங்குகளின் உருவத்தோற்றம், ஒற்றுமை வேற்றுமைகளை அறிந்துகொள்ளப் பயன்படுகிறது.
  • எளிய உயிரினங்களிடமிருந்து சிக்கலான உயிரினங்கள் தோன்றுவதை வகைப்படுத்துதல் மூலம் அறியலாம்.
  • மொனிரா உலகத்தில் 9000 க்கும் அதிகமான சிற்றினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
  • புரோட்டிஸ்டாவில் 59,950 உயிரினங்கள்,
  • பூஞ்சைகள் உலகத்தில் 1,00,000
  • தாவரங்கள் 2,89,640
  • மொத்தம் அறியப்பட்ட விலங்குகளின் எண்ணிக்கை 11,70,000

 

Click Here to Download