‘தங்கமகன்’ தங்கவேலு பற்றிய A to Z செய்திகள்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 • பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்தியாவின் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். ‘தங்கமகன்’ தங்கவேலு A to Z அப்டேஸ் இங்கே..

 

”மருத்துவக் கடனை அடைக்கவேண்டும்”: சாம்பியன் தங்கவேலுவின் கனவு!

 

 • பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற தங்கவேலுவை தங்களது லட்சியப் பயணத்திற்கு ஆதர்சனமாக வைத்து ஒவ்வொரு இந்தியரும் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், தங்கவேலுக்கு ஒரு கனவு இருக்கிறது. அந்த கனவு இப்போது கைகூடவும் போகின்றது.

 

 

 • ”என்ன கனவு என்று கேட்கிறீர்களா?” அதை தங்கவேலின் வார்த்தைகளிலேயே சொல்கிறோம். ‘5 வயதில் எனக்கு விபத்து ஏற்பட்டபோது மருத்துவ செலவிற்காக எனது அம்மா 3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். 15 வருடம் கழிந்து அந்த கடனை அடைக்கபோகிறேன். இந்தத்தருணத்தில் தான் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று உணர்ச்சி பொங்க கூறி இருக்கிறார் தங்கவேலு.

 

 • தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அப்போது தங்கவேலுவின் மருத்துவ செலவிற்காக அவரது அம்மா சரோஜா மூன்று லட்சம் கடன் வாங்கியிருந்தார். வீடு வீடாக சென்று காய்கறி விற்கும் சரோஜாவால் மூன்று லட்சத்தை கட்டமுடியவே இல்லை. இது நாள் வரை அதற்கு வட்டி மட்டுமே கட்டி வந்திருக்கிறார். பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்றதன் மூலம் கிடைக்கும் பரிசுதொகையை வைத்து அந்த கடனை கட்ட போகிறார் தங்கவேலு.

 

 

 

 

 • ”நான் இப்போது உலகின் நம்பர் 1 ஆக இருக்கலாம். ஆனால், என்னுடைய வாழ்க்கை மிக கடுமையானதாக இருந்தது. விளையாட்டு எனக்கு உயிர்! ரியோவில் பதக்கம் வெல்ல முடியவில்லை என்றால், நிதி பற்றாக்குறையால் விளையாட்டில் இருந்தே நான் வெளியேறி இருப்பேன். இதுதான் என்னுடைய கடைசி பிரம்மாஸ்திரமாக இருந்தது. உயரம் தாண்டுதல் விளையாட்டின் மூலம் இதுநாள் வரை நான் சம்பாதித்தது இல்லை. கிராண்ட் பிரிக்ஸ் போட்டியில் வென்றபோதும் நான் எதையும் பெறவில்லை. மாதம் ரூ.5000 சம்பாதிக்கும் என் அம்மாவால் ரூ.3 லட்சம் கடனை எப்படி அடைக்க முடியும்? அதனால் தான் எப்படியாவது இந்தப்போட்டியில் வென்றுவிட வேண்டும் என்கிற லட்சிய வெறியோடு விளையாடினேன். தற்போது கிடைக்கவுள்ள பரிசு பணம் மூலம் முதலில் எனது கடன் அடைக்க வேண்டும். இவ்வுளவு வறுமையிலும் எனது கனவுகளுக்கு உதவிய என் அம்மாவுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை எற்படுத்தி கொடுக்க வேண்டும்” என கனத்த இயத்துடன் தனது பால்ய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறார் தங்கவேலு.மருத்துவ கடனை அடைத்தபிறகு, ஒரு வீடு கட்டுவதும், உயரம் தாண்டுதலில் உலக சாதனை செய்ய வேண்டும் என்பதும் தங்கவேலுவின் மற்றொரு லட்சியம். இதற்கான பயிற்சிகளை எடுக்க இந்தப் பணம் உதவும் என தங்கவேலு நம்புகிறார்.

 

 

 • ”நான் சாதித்ததை தொலைக்காட்சியில் பார்த்த பிறகு எனது அம்மா என்ன விதமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருப்பார் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன். ‘இப்போது நம்மால் ஒரு வசதியான வாழ்க்கை நாம் வாழ முடியும்’ என்று அம்மாவை ஆரத்தழுவி சொல்ல வேண்டும். நான் வீட்டுக்கும் எந்த உதவிகளையும் செய்யாமல் நாள் முழுக்க பயிற்சி எடுத்து இருக்கிறேன். என்னால் எனது குடும்பத்தினர் நிறைய இழந்திருக்கிறார்கள். இனி அவர்களுக்கு நான் திருப்பி கொடுக்க வேண்டும். இந்தியா நமது சாதனைகளை அங்கீகரிக்கும் உறுதியாக நம்பிகிறேன். எனவே இந்தியர்கள் இனி பாரா-விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற தீவிரம் காட்ட வேண்டும் ” என்று தம்ஸ் அப் காட்டுகிறார் தங்கவேலு.

 

பாரா ஒலிம்பிக் சாம்பியன் ‘தங்க’வேலு… யார் இவர்..?

 

 • பிரேசிலில் நடைபெற்றுவரும் பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் வென்றுள்ளார் தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் ‘தங்க’வேலு. சேலத்தில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான தங்கவேலு, இன்று இந்தியா முழுவதிலும் பிரபலமடைந்திருக்கலாம். ஆனால், தங்கவேலுவின் இந்தச் சாதனைக்குப் பின்னால் கடும் வலியும், வறுமையும் நீக்கமற நிறைந்திருந்தது. இன்று மீடியாவில் ஃப்ளாஷ் ஆவதற்கு முன்பு, தமிழகத்தில் எத்தனை பேருக்கு தங்கவேலுவைத் தெரிந்திருக்கும்? ‘பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டும் போட்டிகளில் இதுவரை இந்தியாவிலிருந்து தங்கம் வென்றதில்லை’ என்ற அவப்பெயரைச் சுக்குநூறாக உடைத்திருக்குறார் தங்கமான தங்கவேலு.

 

 

 

 • சேலம் பெரியவடகம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது தந்தை, செங்கல்சூளையில் வேலை செய்கிறார். இவரது தாய் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். தங்கவேலு ஐந்து வயது குழந்தையாக இருந்தபோது, பஸ் விபத்தில் அவரது வலதுகால் உடைந்துபோனது. அதன் பிறகு, எவ்வளவு சிகிச்சை எடுத்தும் அவரது கால் குணமாகவே இல்லை. தங்கவேலுவுக்கு விளையாட்டில் ஆர்வம். ஆனால், பள்ளியில் அவரது கால் ஊனத்தைக் காரணம் காட்டி விளையாட்டில் சேர்த்துக்கொள்ள மாட்டார்களாம்.

 

 

 • மனம் உருகி மற்ற மாணவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்ப்பதை வழக்கமாகவைத்திருந்த தங்கவேலுவுக்கு, விடாமுயற்சி குணம் இருந்தது. பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்குச் சென்ற பிறகு தங்கவேலு மட்டும், மைதானத்தில் தனியாக விளையாடினார். இதனை ஒருநாள், உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன் பார்த்தார். அப்போது, தங்கவேலுவுக்கு வாலிபால் விளையாட்டில்தான் அதீதஆர்வம் இருந்தது. உடற்கல்வி ஆசிரியர் ராஜேந்திரன்தான் தங்கவேலுவுக்குள் இருந்த உயரம் தாண்டுதல் திறமையைக் கண்டு, உயரம் தாண்டுதலில் அவருக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.

 

 

 • ‘‘என்னால் உயரம் தாண்ட முடியும் என என்னுடன் படித்தவர்களால் நம்ப முடியவில்லை. அவர்கள் முன்பு நான் தாண்டிக் காட்டியபோது அசந்துபோனார்கள். அதன்பிறகு, அவர்களின் உதவி மூலமே பல போட்டிகளில் கலந்துகொண்டேன். நான் உடல் ஊனமுற்றவன் என எப்போதும் நினைத்ததில்லை’’ என்கிறார் தங்கவேலு.

 

 • தனது 14 வயதில், முதல் உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார் தங்கவேலு. அரசுப் பள்ளி ஆசிரியரான ராஜேந்திரனிடம் 12-ம் வகுப்புவரை பயிற்சி எடுத்து தங்கவேலு, அதன்பிறகு பெங்களூருவில் சத்தியநாராயணா என்பவரிடம் பயிற்சி பெற்று மேலும் தன்னை மெருகேற்றிக்கொண்டார். இதற்கு முன்பு மாவட்ட அளவிலான போட்டிகளில் தங்கப் பதக்கம், 2011-ல் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் தங்கப் பதக்கம், சர்வதேச உயரம் தாண்டும் போட்டியில் பதக்கம் என தங்கவேலு பல பதக்கங்களைக் குவித்துள்ளார். இந்தப் பதக்கங்கள் எல்லாம், அவரது குடிசை வீட்டை அலங்கரித்துக்கொண்டிருக்கின்றன.

 

 • தங்கவேலுவின் கால் உடைந்தபோது மருத்துவச் செலவுக்கு அவரது அம்மா ரூ.3 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால், அந்தக் கடனை இன்னும் அடைக்க முடியாத அளவுக்கு வறுமையில் உழலும் தங்கவேலுவின் குடும்பத்துக்குத் தற்போது விடிவுகாலம் பிறந்துள்ளது. தங்கவேலுவின் இந்தச் சாதனையை பெரியவடகம்பட்டி கிராம மக்கள் திருவிழாபோல கொண்டாடி வருகின்றனர். தங்கவேலுவுக்கு பேனர்வைத்தும், அவரது படத்துக்கு பாலாபிஷேகம் செய்தும் பெரியவடகம்பட்டி மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

 

காய்கறி வியாபாரம்… கூலிவேலை… சாதித்த மகன்..! தங்கமகன் தாயார் நெகிழ்ச்சி

 

 

 

 

 • பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளதன் மூலம் எனக்கும் அவன் பிறந்த ஊருக்கும் மட்டுமல்ல இந்தியாவுக்கே பெருமை சேர்த்து விட்டான் மாரியப்பன் என்று அவரது தாயார் சரோஜா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

 

 

 • சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த பெரிய வடகம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (21). தங்கப்பதக்கம் வென்ற மாரியப்பன் தாயார் சரோஜா, காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். தந்தை தங்கவேலு செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று வருகிறார். இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இன்னமும் வாடகை வீட்டில் தான் மாரியப்பன் குடும்பம் வசித்து வருகிறது. சேலத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இந்த ஆண்டுதான் பி.பி.ஏ. முடித்து உள்ளார். கல்லூரி விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளதோடு, தாயாருக்கு உதவியாக காய்கறி வியாபாரமும் செய்து வந்துள்ளார் மாரியப்பன். மூத்த மகனான மாரியப்பனுக்கு 5 வயதில் காலில் பஸ் மோதி காயம் ஏற்பட்டது. படிப்பிலும் விளையாட்டிலும் ஆர்வம் அதிகமாக இருந்த மாரியப்பனுக்கு, பெற்றோரால் உதவி செய்ய முடியவில்லை.

 

 

 • ஊர் ஊராக சென்று காய்கறி விற்பதில் கிடைக்கும் பணத்தில் குடும்பத்தை நடத்தவே கஷ்டப்பட்டு வந்தார் தாயார் சரோஜா. ஆனால், மாரியப்பனுக்கு பலர் உதவி செய்தனர். பெங்களூரைச் சேர்ந்தவர்களும், உடன் படித்தவர்களும் ஆசிரியர்களும், ஊர் மக்களும் 100 முதல் ஆயிரம் வரை பணம் கொடுத்து உதவியுள்ளனர். கடந்த 2012ஆம் ஆண்டு முதல் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு பல பதக்கங்களை குவித்து வந்துள்ளார் மாரியப்பன். இலங்கை மற்றும் நெதர்லாந்து நாடுகளில் நடைபெற்ற போட்டிகளிலும் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்று இருக்கிறார்.

 

 

 • தற்போது, பிரேசில் நாட்டில் ரியோ நகரில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் மாரியப்பன் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதனை அறிந்த ஊர் மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை கொண்டாடினர்.

 • ரியோ2016 : பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கப் பதக்கம் வென்று அசத்தினார். இதே பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் இந்தியா தட்டிச் சென்றது. இந்திய வீர் வருண் சிங் பாடி வெண்கலம் வென்றார்.

 

 

 • மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி ஜெனிரோ நகரில் நடந்து வருகிறது. இதில் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு 1.89மீ., உயரம் தாண்டி தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இது ரியோ பாராலிம்பிக்கில் இந்தியா பெறும் முதல் பதக்கம். இவர் தமிழகத்திலுள்ள சேலத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தமிழகத்துக்கு பெருமை மாரியப்பன்

 

 

 

 • சேலத்தில் இருந்து 50 கி.மீ., தூரத்தில் உள்ள பெரியவடுகம்பட்டி மாரியப்பனின் சொந்த ஊர். ஒரு நாள் காலை பள்ளிக்கு செல்வதற்காக சாலையோரம் சென்று கொண்டிருந்தான் மாரியப்பன். அப்போது அவன் வயது ஐந்து. அந்த வழியாக வந்த லாரி, மாரியப்பன் மீது மோத, மாரியப்பனின் வலது கால் நசுங்கியது. ‘டிரைவர் குடிபோதையில் இருந்ததாக சொன்னார்கள். என்ன சொல்லி என்ன பயன். மகனின் கால் போய் விட்டதே’ என்று சொல்லும் மாரியப்பனின் தாய் காய்கறி விற்றுப் பிழைப்பவர். மகனின் மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.3 லட்சம் கடனை இன்னுமும் கட்டி வருகிறார்.

 

 • கால் இல்லை என்பதற்காக மாரியப்பன் முடங்கிவிட வில்லை. உயரம் தாண்டுதலில் முழு மூச்சில் ஈடுபட்டார். ‘ஆரம்பத்தில் என் நண்பர்கள் என்னால் தாண்ட முடியும் என நம்பவில்லை. முதல் முறையாக தாண்டியதும் அப்படியே அதிர்ச்சியடைந்தனர். அதன்பின், நான் பங்கேற்ற மாவட்ட அளவிலான போட்டிகளில் எல்லோரும் ஆதரவு அளிக்கத் துவங்கினர்’ என்று சொல்லும் அந்த இளைஞனின் வயது 20.

 

 • 2013ல் நடந்த தேசிய பாரா அத்லெடிக் சாம்பியன்ஷிப்பில் மாரியப்பன் தாண்டிய விதம், கோச் சத்யநாராயணனுக்குப் பிடித்துப் போக அன்று முதல், மாரியப்பனை சார்ஜ் எடுத்துக் கொண்டார். பெங்களூருவில் வைத்து முழு மூச்சாக பயிற்சி கொடுத்தார். இதன் விளைவாக, துனிஸியாவில் நடந்த ஐபிசி கிராண்ட் பிரிக்ஸ் தொடரில் 1.78 மீ., உயரம் தாண்டி, ரியோ பாரா ஒலிம்பிக் போட்டிக்கான டிக்கெட்டை புக் செய்தார்.