தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்

2016-04-01_16-19-54

  • வீராசாமி செட்டியார் )1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து‘வினோத ரசமஞ்சரி’என்று வெளியிட்டார்.
  • வ. வே. சு. ஐயரின்‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப்படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார்.
  • செல்வகேசவராய முதலியாரின்அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.
  • ஆரம்பகாலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர்.
  • இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்’ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம்,விதவைகள் பட்ட துயர், வரதட்சணைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
  • கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பிடத்தக்கன.
  • சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள்சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார்.
  • கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது. சிறுகதைச் செல்வர் என்றும்,தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார்.
  • இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
  • மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன்சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.