Study Materials

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

The Marathas Ruled Thanjavur

தஞ்சாவூரில் மராத்தியர்கள் ஆட்சி

  •  பீஜப்பூர் சுல்தான் வெங்கோஜி என்பவரை அனுப்பி தஞ்சாவூரை கைப்பற்ற அனுப்பினார்.
  • அவர் தஞ்சாவூரை கைப்பற்றி மராத்தியர்கள் ஆட்சியை ஏற்படுத்தினார்.
  • கி.பி. 1676 முதல் கி.பி. 1856 ம் ஆண்டு வரை தஞ்சாவூரை மராத்தியர்கள் ஆட்சிபுரிந்தனர்.

வெங்கோஜி

  • இவர் ஷாஜி பான்ஸ்லே மற்றும் துக்காபாய் மகன் வெங்கோஜி இவர் எக்கோஜி என்றும் அழைக்கப்பட்டார்.
  • தென்னிந்தியாவின் செல்வத்தை கொள்ளையடிக்கவும், இந்து மதத்தை பரப்பவும் சிவாஜி கர்நாடகப் பகுதி மீது படையெடுப்பை மேற்கொண்டார்.
  • கோல்கொண்டா மற்றும் செஞ்சியை கைப்பற்றி தஞ்சாவூரை நோக்கி சென்றார்.
  • வெங்கோஜியிடம் தனக்கு உரிய பங்கினை அளிக்கும்படி கோரினார்.
  •  ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டதுஎனவே சிவாஜி கொள்ளிடத்தைக் கைப்பற்றினார்சாந்தாஜி என்பவரை பிரதிநிதியாக நியமனம் செய்தார்.
  •  பின்னர் வெங்கோஜி இழந்த பகுதிகளை திரும்ப பெற்று தஞ்சாவூரை ஆட்சி புரிந்தார்.

இரண்டாம் ஷாஜி

  •  வெங்கோஜியின் மகன் இரண்டாம் ஷாஜி மதுரையை பேரரசுடன் இணைத்துக் கொண்டார்.
  • இவர் மருத்துவமனைகளை நிறுவி ஹைதராபாத் மற்றும் அரேபியாவிலிருந்து மருத்துவர்களை வரவழைத்து மக்கள் நலன் காத்தார்.
  • கிறித்தவர்களுக்கு எதிராக செயல்பட்டார்.
  •  இவருக்கு பிறகு சகோதரர் முதலாம் சரபோஜியும் அவரைத் தொடர்ந்து துக்காஜி என்பவரும் தஞ்சாவூரின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றனர்.
  • துக்காஜி வாரிசின்றி இறந்தார்எனவே இவரது மரணத்திற்கு பிறகு வாரிசுரிமைப் போர் ஏற்பட்டது.
  •  கி.பி. 1763 ல் துல்ஜாஜி என்பவர் தஞ்சாவூரின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார்.
  •  இவரது ஆட்சிக் காலத்தில் தஞ்சாவூர்இராமநாதபுரத்திற்கு இடையே எல்லைத்தகராறு ஏற்பட்டது.
  •   பல போராட்டத்திற்கு பின் துல்ஜாஜி ஆங்கில கிழக்கிந்திய கம்பெனியின் ஆதரவுடன் தஞ்சாவூரின் ஆட்சியாளரானார்.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker