TNPSC Tamil Nadu History Study Material inSocial Changes In The State

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

Review Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

Social Changes In The State

  • தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்
  • சி.என். அண்ணாதுரை
  • டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி
  • டாக்டர் எஸ். தருமாம்பாள்
  • மூவலூர் இராமாமிர்தம் அம்மையார்

தமிழ்நாட்டில் சமுதாய மாற்றங்கள்

  • 19 மற்றும் 20 – ம் நூற்றாண்டில் மகாத்மா காந்தி ஜவஹர்லால் நேரு, பாலகங்காதர திலகர், இராஜாஜி போன்ற தேசத்தலைவர்கள் இந்திய விடுதலைப் போராட்டத்தில் முழுமையாகத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு செயலாற்றி வந்தனர்.
  •  தமிழ்நாட்டில் பல்வேறு தலைவர்கள் அரசியல் சுதந்திரத்திற்கு மட்டுமல்லாமல் சமூக விடுதலைக்கும் போராடி வந்தனர்.
  • அரசியல் சுதந்திரம் என்பது சமூக நீதி, சுயமரியாதை மற்றும் கௌரவம் இல்லையெனில் அர்த்தமற்றது என்று அவர்கள் கருதினர்.

நீதிக்கட்சி :

  • தென்னிந்திய வரலாற்றில் இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சியின் ஆட்சி குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமைந்தது.
  • நீதிக்கட்சி, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிராமணர்களின் ஆதிக்கத்திற்க எதிராக பிராமணர்கள் அல்லாதவர்களால் தொடங்கப்பட்ட சமூக இயக்கமாகும்.
  • நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்திய நல உரிமைக்கழகம் ஆங்கிலேயர் ஆட்சியில் சென்னை மாகாணத்தில் தோன்றிய அரசியல் கட்சியாகும்.
  •  இக்கட்சி 1916 – ம் ஆண்டு டி.எம். நாயர் மற்றும் தியாகராயசெட்டி ஆகியோரால் தோற்றுவிக்கப்பட்டது.
  •  நீதிக்கட்சி தொடக்க காலத்தில் கோரிக்கை மனுக்கள் மூலம் பிராமணர் அல்லாதவர்களுக்கு நிர்வாகத்தில் அதிக பிரதிநிதித்துவம் கோரியது.
  • இக்கட்சி தமிழில் திராவிடன்“, தெலுங்கில் ஆந்திர பிரகாசிகா மற்றும் ஆங்கிலத்தில் ஐஸ்டிஸ்என்ற பத்திரிக்கையையும் அச்சிட்டு வெளியிட்டது.
  •  எனவே, இக்கட்சி (Justice Party) என்றழைக்கப்பட்டது.

Click Here to Download