பிற்காலப் பாண்டியர்

Deal Score+6

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பிற்காலப் பாண்டியர்

Later Pandya

முதலாவது பாண்டியப் பேரரசு

  • சங்க கால கடைசிப் பாண்டிய மன்னனான உக்கிரப் பெருவழுதிக்குப் பின்னர் களப்பிரர்கள் சுமார் 250 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர்.  6 – ம் நூற்றாண்டின் இறுதியில் கடுங்கோன்என்ற பாண்டியன் களப்பிரர்களை அழித்து பாண்டியப் பேரரசைப் புத்துயிர் பெறச் செய்தான்.

கடுங்கோன்

  • களப்பிரர்களை அழித்து பாண்டியப் பேரரசை புத்துயிர் பெறச் செய்தவர்.

அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கூன் பாண்டியன்)

  •  முதலில் சமணத்தைச் சார்ந்திருந்த இவர் பின்னர் திருஞானசம்பந்தர்முயற்சியால் சைவத்திற்கு மாற்றப்பட்டார்.
  • நின்றசீர் நெடுமாறன் என்றழைக்கப்படும் நாயன்மாரும் இவரே.

இரண்டாம் வரகுணன்

  • திருப்புறம்பியம் போரில் பல்லவ மன்னன் அபராஜிதனால் தோற்கடிக்கப்பட்டார்.
  •  இப்போர் பாண்டியரின் வலிமையை நசுக்கியது.

வீரபாண்டியன்

  • தக்கோலம் போரில் ராட்டிர கூடர்களால் பராந்தக சோழன்தோற்கடிக்கப்பட்டார்இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வீரபாண்டியன் தன் தந்தை இழந்த பகுதிகளை மீ்ட்டார்.
  • சோழன் தலைகொண்ட கோவீரன்என்றும் போற்றப்படுகிறார்.
  •  பின்னர் சோழ மன்னன் இரண்டாம் ஆதித்த கரிகாலன்என்பவருடன் ஏற்பட்ட போரில் வீரபாண்டியன் கொல்லப்பட்டார்.
  •   இத்துடன் முதலாவது பாண்டியப் பேரரசு முடிவுற்றது.
Click Here to Download