பண்டைத் தமிழகம்

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

பண்டைத் தமிழகம்

Ancient Tamil Nadu

  • பண்டைத் தமிழகம்
  • மூன்று சங்கங்கள்

பண்டைத் தமிழகம்

  •  இமயம் முதல் குமரி வரைப் பரவியுள்ள இந்திய நாட்டில்விந்திய மலைக்குதெற்கிலுள்ள பகுதி, உலகிலேயே மிகமிகத் தொன்மையானது ஆகும்.
  •   இந்தத் தென்னாட்டில், ”தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளுஆகிய மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் மாநிலங்கள் உள்ளனஅவற்றுள் திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள் பேசும் மொழி தமிழ் ஆகும்இதனை

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்

தமிழ் கூறும் நல்லுலகம்” – என்று நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிட்டுள்ளார்.

  •  தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டதுசுதந்திரத்திற்குப் பின் தமிழ்மொழி பேசப்படும் மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டதுஅதற்கு 1967 – ல் தமிழ்நாடுஎன்று அறிஞர் அண்ணா அவர்களால் பெயர் சூட்டப்பட்டது.

வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகம்

  •   வரலாற்றுக் காலத்திற்கு முன்னர், குமரி முனைக்குத் தெற்கே உள்ள இந்துமாக்கடல் பகுதி ஒரு பெருநிலப்பரப்பாக இருந்ததுஅதைக் குமரிக்கண்டம்என்பர் புலவர்.
  •  தென்னாட்டைப் போன்று எட்டு, பத்து மடங்கு பெரிய அந்நிலப் பரப்பில் பஃறுளியாறுஓடியதுமழைவளம் பெருகி மக்களின் நாகரிகம் சிறந்து நல்லதோர் அரசு நடைபெற்றதுஅதுவே பண்டைய அரசான பாண்டியர்அரசாக இருந்திருக்கக் கூடும்.

 

Click Here to Download