Tamil Nadu Budget 2017-2018 | budget for tamil nadu | tamil nadu budget

தமிழக பட்ஜெட் 2017 – 2018

Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தமிழக பட்ஜெட் 2017 – 2018

Tamil Nadu Budget 2017 – 2018

  • தமிழக பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கான செலவினங்கள் 46,322 கோடி ரூபாயாக இருக்கும்.
  • மத்திய அரசிடன் இருந்து மானியமாக 47,454 கோடி பெறப்படும்.
  • தமிழக அரசின் வட்டியில்லா செலவுகள் 1,75,357 கோடிகள்.
  • சம்பளம்,கல்விக்கான மானியம் ரூபாய் 46,331 கோடிகள்
  • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூபாய் 7,000 கோடிக்கு பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2017-18-ஆம் ஆண்டில் தமிழகத்தின் நிதிப் பற்றாக்குறை ரூபாய் 41,977 கோடியாக உள்ளது.
  • மாநிலத்தின் சொந்த வருவாய் ரூபாய் 99,590 கோடி
  • தமிழ்நாட்டின் மொத்த வருவாய் ரூபாய் 1,59,362 கோடி
  • பால்வளத்துறைக்கு ரூ.130 கோடி, மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.
  • மாநில பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரிக்கான சட்டத்தை மாநில அரசு இயற்றும் .
  • நகர்புற வறுமை ஒழிப்பு திட்டத்திற்கு ரூபாய் 272.12 கோடி ஒதுக்கீடு.
  • இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்திற்காக ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு. இந்த திட்டத்தின் கீழ் மதுரை,கோவை மற்றும் திருச்சியில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
    அளிக்கப்படும்.
  • வேலையில்லா இளைஞர்களுக்கு தொடர்ந்து உதவித் தொகை வழங்கப்படும்.
  • கிராம வறுமை ஒழிப்புத் திட்டத்திற்கு 469 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • நகர்புற தூய்மை இந்தியா திட்டத்திற்கு 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • தமிழ் பல்கலைகழகத்திற்கு 6 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மதுரை உலகத்தமிழ்
  • பல்கலைகழகத்தில் பெருந்திட்ட வளாகம் கட்ட 48 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • உலகத்தமிழ் ஆராய்ச்சி மையத்தில் உள்ள வசதிகளை மேம்படுத்துவதற்காக 4.36 கோடி ஒதுக்கீடு.
  • தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • ஏழை குடும்பங்களுக்கு 3.5 லட்சம் இலவச மனைப் பட்டா வழங்கப்படும்.
  • சமூக நலத்துறைக்கு 4,781 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • 42.16 கோடி ரூபாய் செலவில் 10 புதிய வட்டாட்சியர் அலுவலகங்கள் கட்டப்படும்.
  • 2017-18-ஆம் ஆண்டில் 100 லட்சம் மெட்ரிக் டன் அளவிற்கு உணவு உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • அரசுக்கு நல்ல லாபம் தந்து வரும் தோட்டப் பயிர்கள் பயிரிடப்படும் பரப்பளவை 34 லட்சம் ஏக்கரிலிருந்து 39 லட்சம் ஏக்கர் அளவிற்கு அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    விவசாயிகளுக்கு கரும்புக்கான மானியம் அளிப்பதற்காக கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு 137.26 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது.

ஏழைப் பெண்களுக்கு கறவைப் பசு, 1.5 லட்சம் குடும்பங்களுக்கு வெள்ளாடுகள் வழங்கப்படும்

  • தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும் என்று ஜெயக்குமார் அறிவித்தார்.
  • 2017-18ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ஜெயக்குமா அறிவித்திருப்பதாவது,
  • ஊரக வறுமை ஒழிப்பு திட்டங்களுக்கு ரூ.469 கோடி ஒதுக்கீடு.
  • ஏழைப் பெண்களுக்கு 12 ஆயிரம் கறவைப் பசுக்களும், 1.5 லட்சம் குடும்பங்களுக்கு 6 லட்சம் வெள்ளாடுகளும் வழங்கப்படும்.
  • 25 கால்நடை கிளை மையங்கள் கால்நடை மருந்தகங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • கால்நடை மருந்தகங்கள் கால்நடை மருத்துவமனையாகவும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 25 புதிய கால்நடை கிளை மையங்களையும் அரசு அமைக்கும்.
  • சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் குழு ஏற்படுத்தப்படும்.
  • காங்கேயம், பர்கூர் உள்ளிட்ட நாட்டு மாடுகளை பாதுகாக்க அரசு நிதி உதவி வழங்கும்.

காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கு 10,500 பேர் விரைவில் தேர்வு

காவல்துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரம்

  • காவலர் வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கூடுதலாக 3 ஆயிரம் வீடுகள் கட்டப்படும்.
  • நடப்பாண்டில் ரூ.30 கோடி செலவில் கூடுதலாக 29 காவல்நிலையங்கள்
  • காவல்துறை நவீனமயமாக்க ரூ.6,483 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கூடுதல் வாகனங்களையும், தகவல் தொலைத் தொடர்பு கருவிகளையும் வாங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • தீயணைப்புத் துறைக்கு ரூ.253 கோடி ஒதுக்கீடு.
  • குற்றவாளிகளை சீர்திருத்தும் அமைப்புகளாக திகழும் சிறைச்சாலைத் துறைக்கு ரூ.282 கோடி ஒதுக்கீடு.
  • நிதி நிர்வாகத்தக்கு ரூ.984 கோடி ஒதுக்கீடு.
  • நீதிமன்றக் கட்டடங்கள் கட்டுவதற்கு ரூ.229 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • சோழிங்கநல்லூரில் புதிய தொழில்நுட்ப பூங்கா.
  • தொழில் துவங்குவதற்கான ஒற்றைச் சாளர முறை மேலும் வலுப்படுத்தப்படும்.
  • கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் திட்டம் தொடர்ந்து வழங்கப்படும்.
  • காஞ்சிபுரத்தில் ரூ.130 கோடி செலவில் 330 ஏக்கர் பரப்பளவில் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும்
  • ரூ 1 லட்சம் செலவில் கிராம கோயில் புதுப்பிக்கப்படும்.
  • நீர்வளத்துறைக்கு ரூ.4,971 கோடி ஒதுக்கீடு.
  • அவினாசி-அத்திக்கடவு திட்டத்துக்கு ரூ. 250 கோடி ஒதுக்கீடு.
  • மெட்ரோ ரயில் வண்ணாரப்பேட்டை- விம்கோ நகர் வரை விரிவு.
  • நிதிப்பற்றாக்குறை ரூ.2.79 சதவிகிதமாக இருக்கும்.
  • 107.5 கி.மீ தொலைவுக்கு 3 புதிய மெட்ரோ வழித்தடங்கள் அமைக்க நடவடிக்கை.
  • உதய் மின் திட்டத்தில் இணைந்ததால் கடன் வட்டி குறைந்து ரூ. 1,335 கோடி சேமிக்கப்படும்.
  • உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இந்தாண்டு நடத்த ரூ.75 கோடி ஒதுக்கீடு.
  • சாலைகள் அகலப்படுத்த மற்றும் புதிய பாலங்கள் கட்ட ரூ.3,100 கோடி ஒதுக்கீடு.
  • 100 யூனிட் இலவச மின்சாரத் திட்டம் தொடரும்.
  • ஆண்டுதோறும் தனிநபர் மின்சார பயனீட்டு அளவு அதிகரித்து வருகிறது.
  • நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ.10,067 கோடி.
  • சென்னை, புறநகர் சாலைத் திட்டங்களுக்கு ரூ.744 கோடி.
  • ராமநாதபுரம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம்.
  • குடிமராமத்து பணிகளுக்காக ரூ.300 கோடி ஒதுக்கீடு.
  • சாலை பாதுகாப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
  • நீர்வள ஆதராங்களுக்கு ரூ.4,500 கோடி ஒதுக்கீடு.
  • தோட்டக்கலை பயிர்களின் பரப்பளவை, 34 லட்சம் ஏக்கரில் இருந்து 39 லட்சம் ஏக்கராக உயர்த்தப்படும்.
  • உலகவங்கி உதவியுடன் ரூ. 3,042 கோடியில் நீர், நில வளத்துக்கு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
  • தாமிரபரணி, நம்பியாறு அணைகளை இணைப்புக்கு ரு.300 கோடி
  • ரேஷன் கடையில் பருப்புகள் தொடர்ந்து மானிய விலையில் வழங்கப்படும்.
  • உணவுப் பொருள் மானியத்துக்காக ரூ.5,500 கோடி ஒதுக்கீடு.
  • அரசின் சார்பில் விலைக் கட்டுப்பாடுக்கு புதிய பொருள்கள் விற்கப்படும்.
  • ஏழைகளுக்கு 12,000 பசுகள், 6,000 ஆடுகள் வழங்கப்படும்.
  • கடல் அரிப்பை தடுக்க ரூ.20 கோடியில் புதிய தொழில்நுட்பம் ஏற்படுத்தப்படும்.
  • 25 கால்நடை மருந்தகங்கள், கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்படும்.
  • சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களுக்கு ரூ.3,790 கோடி
  • மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி ஒதுக்கீடு.
  • தொழிலாளர் நலத்துறைக்கு 1,010 கோடி
  • மீனவர்களுக்கு ரூ. 85 கோடி செலவில் 5,000 வீடுகள்.
  • மீன்பிடி தடைக்காலத்தில் ரூ.5,000 உதவித்தொகை.
  • படகு, டீசல் அளவு 15,000 லிட்டரில் இருந்து 18,000 லிட்டராக உயர்வு.
  • விதை உற்பத்தியை வலுப்படுத்த ரூ.50 கோடியில் திட்டம்.
  • ஆவின் பால் பொருள்களை பிரபலப்படுத்த 200 புதிய பாலகங்கள்.
  • நாட்டு மாடு இனப்பெருக்கத்துக்கு புதிய திட்டம்.

  • வேளாண் இயந்திரங்களை வாடகைக்கு விட கூடுதலாக 590 மையங்கள் அமைக்கப்படும்.
  • உழவர் உற்பத்திக் குழுவுக்கு ரூ.100 கோடி.
  • கோழிப்பண்ணை வளர்ச்சிக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • 2 லட்சம் விவசாயிகள் பயன்படும் வகையில் உழவர் உற்பத்திக் குழு அமைக்கப்படும்.
  • உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நிவாரண உதவி ரு.20,000 ஆக உயர்வு.
  • பயிர் காப்பீடு மானியத்திற்கு ரூ. 522 கோடி நிதி ஒதுக்கீடு
  • பள்ளிக் கல்வித்துறைக்கு ரு.26,932 கோடி
  • உயர்க் கல்வித்துறைக்கு ரூ. 3,680 கோடி
  • பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கு  ரூ.988 கோடி நிதி
  • 2017-18-ல் 100 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை தயாரிக்க திட்டம்.
  • அகதிகள் நலனுக்கு ரூ.116 கோடி.
  • காவல்துறை வீட்டு வசதிக்கு ரூ.450 கோடி
  • குறைந்த நீரில், நீடித்த நவீன கரும்பு சாகுபடிக்கு ஊக்குவிக்கப்படும்.
  • பழங்குடியினர் துறைக்கு ரூ.265 கோடி
  • நீதித்துறை மேம்பாட்டுக்கு ரூ.983 கோடி
  • ஏழைக்குடும்பங்களுக்கு 3.5 லட்சம் வீட்டுமனைப் பட்டா வழங்கப்படும்.
  • 10,500 புதிய காவலர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • தீயணைப்புத்துறைக்கு ரூ.253 கோடி
  • இளைஞர் நலன், விளையாட்டுத்துறைக்கு ரூ.165 கோடி.
  • ஆதி திராவிடர் நலன்துறைக்கு ரூ.3,009 கோடி
  • இ- சேவை மையங்கள் மூலம் 500 விதமான சேவைகள்
  • மெட்ரோ ரயில் திட்டத்துக்கான 2-ம் கட்ட பணிக்கான திட்ட அறிக்கை விரைவில் மத்திய அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
  • அவினாசி அத்திக்கடவு திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதியை, மாநில அரசு எதிர்நோக்கியுள்ளது.
  • சுகாதாரத்துறைக்கு ரூ.10, 158 கோடி
  • சிறைத்துறைக்கு ரூ.282 கோடி
  • காவல்துறைக்கு ரூ 6,483 கோடி
  • உள்ளாட்சி தேர்தல் நடத்த ரூ.174 கோடி நிதி.
  • மின்சாரம் எரிசக்தி துறைக்கு ரூ.16,998 கோடி
  • கோவை, திருச்சி, மதுரையில் 1 லட்சம் இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி
  • நகராட்சி நிர்வாகத்துறைக்கு ரூ. 13,996 கோடி
  • தமிழ்வளர்ச்சிக்கு ரூ.48 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்பல்கலைக்கழகத்துக்கு ரூ.6 கோடி ஒதுக்கீடு
  • தொழில்துறைக்கு ரூ.2,088 கோடி ஒதுக்கீடு
  • 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ. 1,000 கோடி
  • கால்நடை பராமரிப்புக்கு ரூ. 1,161 கோடி
  • தமிழக அரசின் மொத்த கடன் ரூ 3,14,166 கோடி
  • உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியாக ரூ. 200 கோடி ஒதுக்கீடு.
  • மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது
  • ஊரகப்பகுதிகளில் 135 இடங்களில் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஐடி துறைக்கு ரூ.116 கோடி
  • போக்குவரத்துறைக்கு ரூ.2,191 கோடி
  • வணிகவரி மூலம் ரூ.77,234 கோடி வருவாய் கிடைக்கும்.
  • நெடுஞ்சாலை துறைக்கு 10,067 கோடி ஒதுக்கீடு
  • குடிநீர் பற்றாக்குறையை சமாளிக்க ரூ.615 கோடி.
  • அரசின் மொத்த செலவு ரூ. 1,75,351 கோடி.
  • 017-18-ல் பொருளாதார வளர்ச்சி 7 சதவிகிதமாக இருக்கும்
  • கூட்டுறவுத்துறைக்கு ரூ.1,830.50 கோடி.
  • மகப்பேறு உதவி ரூ.12,000 முதல் 18,000 ஆக உயர்வு
  • கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு ரூ.7,000 கோடி புதிய கடன் வழங்க நடவடிக்கை.
  • மீன்வளத்துறைக்கு ரூ.768 கோடி
  • மாநிலத்தின் வரி அல்லாத வருவாய் ரூ.12,318 கோடி.
  • மாநிலத்தின் சொந்த வருவாய் ரூ. 99,590 கோடி.
  • தமிழகத்தில் ரூ. 3, 14, 366 கோடி கடன்.
  • தமிழகத்தில் ரூ. 41,977 கோடி நிதிப்பற்றாக்குறை.