Tamil Ilakkiya Sirappu | TNPSC | TET Study Materials

இலக்கியச் சிறப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • காப்பியத்தில் கதைப் பாத்திரங்களின் இயல்புக்கு ஏற்றவாறும் சூழலுக்கு இசைந்தவாறும் தமிழ்ப் பண்பாட்டிற்கு ஏற்றவாறும் உரிய சந்தங்களோடு (சந்தம்= ஓசை நயம்) அமைத்துக் கம்பர் பாடியிருப்பதால் கற்போர் உள்ளத்தில் நன்கு பதிந்து விடுகின்றது.
  • கற்பார் இராமபிரானை யல்லால் மற்றும் கற்பரோஎன்னும் கருத்திற்கு ஏற்ப, கம்பராமாயணம் உயர் கருத்துகளைத் தெரிவிப்பதாக விளங்குகின்றது. மேலும் “வான்மீகி இராமாயணத்தையே விஞ்சும் சுவையுடைய காப்பியமாகக் கம்பர் படைத்துள்ளார்” என்று .வே.சு. ஐயர் போற்றியுள்ளார்.
  • கல்வியில் பெரியர் கம்பர்என்றும் கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்றும் வழங்கும் மொழிகள் அவரது கவித்திறனைப் பறை சாற்றும்.
  • பாரதியார் தம் பாடலில்புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு என்று போற்றியுள்ளார்.
  • யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல் வள்ளுவர் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே கண்டதில்லை, உண்மை வெறும் புகழ்ச்சியில்லை என்றும் பாராட்டியுள்ளார் பாரதியார்.
  • கதைப் பாத்திரங்களை மனிதப் பாங்கின் அடித் தளத்திலிருந்து பேச வைத்து, உணர்ச்சியை வெள்ளம் போலப் பெருகி ஓட விட்டுப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டுகின்ற தன்மையால் கம்பர் உலகப் பெருங்கவிஞர்களுள் ஒருவராகத் திகழ்கின்றார்.
  • உலக மகாகவி, கவிச்சக்கரவர்த்திஎன்றும் தமிழறிஞர்களால் சிறப்பிக்கப்படுகின்றார்.

 

Click Here To Get More Details