டி.என்.பி.எஸ்.சி. குரூப் 4 தேர்வு விண்ணப்பிக்க செப்.14 வரை நீட்டிப்பு

 

tnpsc

  • சென்னை: குரூப் 4 தொகுதியில் காலியாகவுள்ள 5 ஆயிரத்து 451 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று வியாழக்கிழமை (செப்.8) கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு கட்டணம் செலுத்த செப்.16-ஆம் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • இளநிலை உதவியாளர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர், தட்டச்சர் உள்ளிட்ட குரூப் 4 தொகுதியின் கீழ் 5 ஆயிரத்து 451 பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்தக் காலியிடங்களை எழுத்துத் தேர்வு மூலம் நிரப்புவதற்கான அறிவிக்கையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) கடந்த மாதம் 9 ஆம் தேதி வெளியிட்டது. கடந்த ஒரு மாதமாக இணைய வழியாக (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்பித்து வந்தனர். எழுத்துத் தேர்வானது நவம்பர் 6 ஆம் தேதியன்று காலை 10 மணிக்குத் தொடங்கி, பிற்பகல் 1 மணி வரை நடைபெறும்.இதுவரை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

 

TAMIL VIDEOS MATHS VIDEOS Online Test DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS

EXAM STUDY MATERIALS
LATESTS GOVERNMENT JOBS

No Comments

Sorry, the comment form is closed at this time.