நீச்சலில் ஹங்கேரியின் கதின்கா சாதனை

Review Score0

மகளிருக்கான 400 மீட்டர் நீச்சல் போட்டியில் ஹங்கேரியின் கதின்கா ஹோஸ்ஜூ புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றார். அவர் பந்தய தூரத்தை 4 நிமிடம் 26.36 விநாடியில் கடந்தார். இதற்கு முன்பு 2012 லண்டன் ஒலிம்பிக்கில் யூ ஹிவான் 4 நிமிடம் 28.43 விநாடியில் கடந்ததே உலக சாதனையாக இருந்தது.

இந்த சாதனையை கதின்கா முறியடித்து புதிய உலக சாதனை நிகழ்த்தினார். அமெரிக்க வீராங்கனை மாயா டிராடோ 4 நிமிடம் 31.15 விநாடிகளில் இலக்கை அடைந்து வெள்ளிப் பதக்கமும், ஸ்பெயினின் மரியா பில்மோனேட் 4 நிமிடம் 32.39 விநாடிகளில் இலக்கை அடைந்து வெண்கலப் பதக்கமும் கைப்பற்றினர். மகளிருக்கான 4X100 மீட்டர் பிரீ ஸ்டைல் தொடர் நீச்சலில் ஆஸ்திரேலி அணி புதிய உலக சாதனை படைத்து தங்கம் வென்றது.

இமா மெக்கான், பிரிட்டானி எம்ஸிலி, புரோன்டி கேம்பல், கேட் கேம்பல் ஆகியோரை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய அணி பந்தய தூரத்தை 3 நிமிடம் 30.65 விநாடியில் கடந்தது. இதே அணி கடந்த இருவருடங்களுக்கு முன்பு பந்தய தூரத்தை 3 நிமிடம் 30.98 விநாடிகளில் கடந்திருந்தது.

தங்களது சொந்த சாதனையை தற்போது அவர்களே முறியடித்துள்ளனர். அமெரிக்காவுக்கு வெள்ளிப் பதக்கமும் (3 நிமிடம் 31.89 விநாடி) கனடாவுக்கு வெண்கல பதக்கமும் (3 நிமிடம் 32.89 விநாடி) கிடைத்தது. ஆடவருக்கான 400 மீட்டர் பிரீஸ்டைல் நீச்சலில் ஆஸ்திரேலிய வீரர் ஹார்டன் தங்கம் வென்றார்.

அவர் பந்தய தூரத்தை 3 நிமிடம் 41.55 விநாடியில் கடந்தார். சீனாவின் சன் யங் வெள்ளிப் பதக்கமும், இத்தாலியின் டெட்டி கபேரியலி வெண்கலப் பதக்கம் பெற்றனர். 400 மீட்டர் தனிநபர் மெட்லே நீச்சல் பிரிவில் ஜப்பான் வீரர் ஹகினோ 4 நிமிடம் 06.05 விநாடியில் கடந்து தங்கம் வென்றார். அமெரிக்காவின் ஹலிஸி வெள்ளிப் பதக்கமும், ஜப்பானின் செட்டோ தயா வெண்கலப் பதக்கம் கைப்பற் றினர்.

GOVERNMENT EXAM