சங்கரதாசு சுவாமிகள்

Deal Score+14

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

 

 • முறைப்படுத்தப்பட்ட தமிழ்நாடக வரலாறு இவரிலிருந்தே தொடங்குகிறது.
 • இருபதாம் நூற்றாண்டு நாடகத்துறையை நசிவடையாமல் காத்ததால் இவரைத் தமிழ்நாடகத் தலைமையாசிரியர் எனப் போற்றுவர்.
 • அபிமன்யு சுந்தரி, இலங்காதிலகம், கோவலன், நல்லதங்காள், பிரகலாதன் உள்ளிட்ட 40 நாடகங்கள் இவர் படைத்தவையாகும்
 • தமிழ் நாடக வரலாற்றுக்குப் புத்துயிர் தந்த தவத்திரு சங்கரதாசு சுவாமிகள் 1867ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7-ம் நாள் தூத்துக்குடியில் பிறந்தார்.
 • தாமோதரக் கணக்குப்பிள்ளை என்பவர் இவரது தந்தை. இவரது தந்தையார் புலமைமிக்கவராக விளங்கினார். அன்னாரை இராமாயணப் புலவர் என அப்பகுதி மக்கள் அழைத்தனர்.
 • 19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் தமிழ் நாடக உலகின் தனிப்பெரும் தகைமையர்களாக விளங்கிய சிலருள் குறிப்பிடத்தக்கவர்.
 • கூத்துமரபிலிருந்து உருவாகி வளர்ந்த தமிழ் நாடக அரங்கம், பெட்டி அரங்க (Proscenium) மரபிற்கேற்ப உருபெற்றது சங்கரதாஸ் சுவாமிகள் காலத்தில்தான்.
 • தமிழ் நாடகத் தலைமையாசிரியர்என அழைக்கப்படும் இவர் சுமார் 40 நாடகங்களை எழுதியுள்ளார்.
 • அவற்றில் இப்போது 18 நாடகங்களுக்கான பனுவல்களே கிடைத்துள்ளன.
 • புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது சமாதி புதுவை அரசால் பாதுகாக்கப்படுகிறது.
 • நாடகத்தமிழ் உலகின் இமயமலை, தமிழ்த் நாடக தலைமை ஆசிரியர்
 • நாடகம் மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பதே சுவாமிகளின் முதல் நோக்கமாகும்.
 • எனவே, பாமர மக்களுக்குத் தெரிந்த பழங்கதைகளை நாடகமாக்கினார்.

 

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]