உச்சநீதிமன்ற அதிகாரங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உச்சநீதிமன்ற அதிகாரங்கள்

 • உச்ச நீதிமன்றம் நீதிமன்ற ஆவணங்களைப் பத்திரமாகப் பாதுகாக்கின்றது. உச்ச நீதிமன்ற அதிகாரங்கள் மூன்று வகைப்படும்.  அவை,
 1. முதல் விசாரணை அதிகாரம் (Original Jurisdiction)
 • மத்திய அரசுக்கும், ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் இடையிலான வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.
 • மாநிலங்களுக்கிடையே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.
 • மத்திய அரசும் மாநில அரசும் ஒருபுறமும், மாநிலங்கள் மறுபுறமும் இருந்து தொடரும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.
 1. மேல்முறையீட்டு விசாரணை அதிகாரம் (Appellate)
 • மாநிலங்களிலுள்ள உயர் நீதிமன்றத் தீர்ப்புகளை எதிர்த்து வரும் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்பளித்தல்.
 1. ஆலோசனை அதிகாரம் (Advisiory)
 • குடியரசுத் தலைவருக்குத் தேவையான நேரங்களில் சட்ட ஆலோசனை வழங்குகிறது. தக்க காரணங்களுக்கு ஆலோசனை கூற மறுப்பது.

பிற அதிகாரங்கள் (Miscellaneous Powers)

 • மக்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பிக்கலாம்.
 • நீதிமன்ற அவமதிப்புக்காகச் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து விசாரித்துத் தண்டிக்கலாம். தக்க காரணங்களுக்காக எவர் மீதும் நீதி ஆணைகளைப் (Writes) பிறப்பிக்கலாம்.
 • உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள், கீழ் நீதிமன்றங்களைக் கட்டுப்படுத்தும்.
 • உச்ச நீதிமன்றம் மட்டுமே நீதிப்புனராய்வு (Judicial Review) செய்ய முடியும்.
 • பொதுநல வழக்குகளை (Public Interest Petitions) விசாரித்துத் தீர்ப்பு வழங்கும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]