உச்சநீதிமன்றத்தின் ஆள்வரை

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

உச்சநீதிமன்றத்தின் ஆள்வரை (Jurisdiction)

 • ஏற்கனவே உச்சநீதிமன்றம் தனது அவதூறு பற்றி தண்டனை வழங்க அதிகாரம் கொண்டுள்ளது. இதுதவிர
 1. முதல் ஏற்பு ஆள்வரை (Original Jurisdiction)
 2. மேல் முறையீட்டு ஆள்வரை (Appellate Jurisdiction)
 3. அறிவுரை ஆள்வரை (Advisory Jurisdiction Art 143)

உயர்நீதிமன்றங்கள் Art (214)

 • ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒர் உயர்நீதிமன்றம் இருக்க வேண்டுமா அரசியலமைப்பு விதிக்கிறது எனினும் சட்டம் இயற்றுவதன் மூலம் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்குப் பொதுவானதாக அல்லது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஒரு நேரடி ஆட்சிப் பகுதிக்கும் (யூனியன் பிரதேசம் பொதுவானதாகவும் ஒர் உயர்நீதிமன்றத்தை நாடாளுமன்றத்தை நாடாளுமன்றம் உருவாக்கலாம்.
 • உயர் நீதிமன்றம் ஒவ்வொன்றும் ஒரு தலைமை நீதிபதியையும் குடியரசுத் தலைவர் நிர்ணயிக்க எண்ணிக்கையில் மற்ற நீதிபதிகளையும் கொண்டிருக்கும் இதனால் உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை அரசியலமைப்பு வரையறுக்கவில்லை.
 • உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியையும் மற்ற நீதிபதிகளையும் குடியரசுத் தலைவர் நியமனம் செய்ய தலைமை நீதிபதியை நியமிக்கும் பொழுது அம்மாநில ஆளுநரை கலந்தாலோசிப்பார்.
 • உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்
 • குறைந்த்து பத்து ஆண்டுகள் நீதித்துறை பணியாளராக இருந்திருக்க வேண்டும் அல்லது குறைந்த்து பத்து ஆண்டுகள் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக இருந்திருக்க வேண்டும்.
 • ஒய்வுபெறும் வயது 62 ஆகும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு 65 ஆகும்.
 • பதவிப்பிரமாணம் ஆளுநர் முன்பாக பதவிப்பிரமாணம் எடுக்க வேண்டும்.
 • உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் முறையிலேயே உயர்நீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் செய்ய இயலும்.
 • உச்ச நீதிமன்ற நீதிபதி தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]