சுகன்யா சம்ரிதி யோஜனா

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Sukanya Yojana camriti

 

சுகன்யா சம்ரிதி யோஜனா

 • இந்தியப் பெண் குழந்தைகளின் சிறப் பான எதிர்காலத்திற்காக, பிரதமர் நரேந்திர மோடியால் ஜனவரி 2015-இல் சுகன்யா சம்ரிதி யோஜனா தொடங்கப்பட்டது. நம் நாட்டிலுள்ள பெண் குழந்தைகளின் உயர்கல்வி மற்றும்திருமணச்செலவைசமாளிக்கஉதவும்நோக்கில்இத்திட்டம்உருவாக்கப்பட்டது.

 

 • உங்களது அருகிலுள்ள தபால் நிலையத் திலோ பொதுத்துறை வங்கியிலோ சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கை எளிதில் தொடங்கமுடியும். அதிகபட்சமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களுக்கு ஆளுக்கொரு கணக்காக தொடங்கலாம். ஏற்கனவே தொடங்கியுள்ள கணக்கை இந்தியாவின் எந்த ஒரு மூலையிலுமுள்ள தபால் அலுவலகத்துக்கோ, வங்கிக்கோ மாற்றிக்கொள்ளும் வசதி உண்டு.

 

 • ஒரு பெண் குழந்தை பிறந்த உடனே கூட சுகன்யா சம்ரிதி யோஜனா கணக்கைத் தொடங்கலாம். அதிகபட்சமாக பத்து வயது பெண் குழந்தைக்கு கணக்கு தொடங்கலாம்.

 

 • குழந்தையின் சட்டப்பூர்வமான பாது காவலர் பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பள்ளிச் சான்றிதழ் போன்ற ஏதாவதொரு அடையாள அட்டையைக் கொண்டிருக்க வேண்டும்.

 

 • பாதுகாவலருக்கான முகவரிச் சான்றாக- ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், தொலைபேசிக் கட்டண ரசீது, மின்சாரக் கட்டண ரசீது, இந்திய அரசால் வழங்கப்பட்ட ஏதாவதொரு சான்றிதழ் இவற்றிலொன்றை இணைக்க வேண்டும்.

 

 • பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ். சில சமயங்களில் விதிவிலக்காக இந்திய அரசு அளித்த இருப்பிடச் சான்றிதழும் ஏற்றுக்கொள்ளப்படும். இத்திட்டத்தின்கீழ் கணக்கு தொடங்க பாதுகாவலரின் அடையாளச் சான்று, முகவரிச் சான்று, பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் இம்மூன்றும் தேவை.

 

 • இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சமாக அரசு ரூ. 1,000 ரூபாயை கணக்கில் போடும். அதன்பின் பெண் குழந்தையின் பாதுகாவலர் மாதந்தோறும் எவ்வளவு ரூபாய் வேண்டு மானாலும் பணம் போடலாம். ஒரு வருடத் திலோ அல்லது மாதத்திலோ எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் போடலாம். வரைவோலையாக, காசோலையாக, பணமாக எப்படி வேண்டுமானாலும் சேமிக்கலாம். ஆண்டுக்கு ரூ. 1.5 லட்சம் வரை இத்திட்டத்தின்கீழ் சேமிக்கலாம்.

 

 • கணக்கு தொடங்கியதிலிருந்து 21 வருடங் களுக்குப்பின் தொகை முதிர்ச்சியடையும். குழந்தையின் பெற்றோர் கணக்கு தொடங்கியது முதல் 14 வருடங்கள் மட்டுமே சேமிக்க முடியும். அதன்பின் தொகை முதிர்ச்சியடையும் வரை பணம் போடத் தேவையில்லை. இடையில் பெண்ணுக்கு 18 வயதாகும்போது, உயர்கல்விக்கென சேமிப்புத் தொகையிலிருந்து பாதியளவு எடுக்க வசதியுண்டு.

 

 • 21 வருடங்களில் கணக்கு முதிர்ச்சிபெற்று மொத்த தொகையையும் எடுக்கலாம். ஒருவேளை சேமித்த பணத்தை அப்போதும் எடுக்கவேண்டிய அவசியம் வரவில்லை யெனில், அது தொடர்ந்து வட்டி பெற்றுத் தரும். இப்போது பிபிஎஃப் (டடஎ) கணக்காக மாறி அதற்கான வட்டியை ஈட்டித்தரும். இது முதிர்ச்சிடைய 15 ஆண்டுகள் ஆகும். எனினும் ஐந்தாண்டு கால இடைவெளியில் தேவைப்பட்டால் பணம் எடுத்துக் கொள்ளலாம்.

 

 • சுகன்யா சம்ரிதி சேமிப்புக் கணக்கு மற்றும் பிபிஎஃப் கணக்குக்கான வட்டி நிலையான ஒன்றல்ல. ஆண்டுதோறும் இது மாறுபடும். 2014-15 -ஆம் ஆண்டுக்கு சுகன்யா சம்ரிதி கணக்குக்கு1 சதவிகித வட்டியும் பிபிஎஃப் கணக்குக்கு 8.7 சதவிகித   வட்டியும் அளிக்கப்படுகிறது.

 

 • இந்த திட்டத்தில் வருடத்துக்கு அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் வரை சேமிக்கலாம். அந்தத் தொகைக்கு வரி கிடையாது என்பது ஒரு சாதகம்.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]