Structure Of Algae | TNPSC | TET Study Materials

ஆல்காவின் அமைப்பு

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ஆல்காவின் அமைப்பு

  • ஆல்காக்கள் உடலம் எளிய ஒற்றைச் செல்லாகவோ ஒருங்கமைந்த அல்லது கூட்டமைவு செல்களாகவோ இழையாகவோ அல்லது பாரன்கைமாத் திசு அமைப்பிலோ காணப்படும். பழுப்புப் பாசிகள் தவிர ஏனைய அனைத்து வகுப்புகளிலும் ஒர செல்வகை அதிகமாக காணப்படுகிறது.
  • ஆல்காக்கள் கசையிழைகளுடன் நகரும் திறன் கொண்டவையாகவோ அல்லது நகரும் தன்மை அற்றோ இருக்கலாம்.
  • பெரும்பாலான ஆல்காக்கள் பொதுவாக இழை போன்ற உடலம் உடையன. ஒரு எளிய இழையில் செல்கள் ஒரு வரிசையில் ஒன்றின் நுனியில் ஒன்றாக அடுக்கப்பட்டு கிளைத்தல் இன்றிக் காணப்படும் எ.கா.யுலோத்ரிக்ஸ்.
  • சில ஆல்காக்களில் இழைகள் கிளைத்தும் காணப்படும். நீலப் பசும்பாசிகளின் எளிய இழைகள் டிரைக்கோம்கள் எனப்படும்.
  • காலெர்ப்பா சர்காஸம் லாமினேரியா பியூக்கஸ் போன்ற பெரிய உடலத்தை உடைய ஆல்காக்களில் வேர் தண்டு இலை அமைப்புகள் காணப்படும்.
Click Here To Get More Details