வைக்கோல் காளான் வளர்த்தால் 6 மாதத்தில் ரூ.30 ஆயிரம் வருமானம்!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

Image result for வைக்கோல் காளான் வளர்த்தால்

 

  • வைக்கோல் பயன்படுத்தி காளான் வளர்த்தால் 3 முதல் 6 மாதங்களில் ரூ.30 ஆயிரத்துக்கும் அதிகமான வருமானம் கிடைக்கும் என பசுமை விகடன் நடத்திய கருத்தரங்கில் பிரபல காளான் வளர்ப்பு பயிற்சியாளர் சேகரன் பேசினார்.

 

  • பசுமை விகடன் மற்றும் கும்பகோணம் ரோட்டரி சங்கம் இணைந்து நடத்திய ‘மகிழ்ச்சி தரும் மாடித்தோட்டம் மற்றும் நீர்நிலைகள் மீட்பு’ பயிற்சி கருத்தரங்கு, ஸ்ரீபாலாஜி மகாலில் நடைபெற்றது. தலைமையுரையாற்றிய ரோட்டரி சங்கத்தின் தலைவர் சௌமியா நாராயணன், ‘‘மாடித்தோட்டம் அமைத்தால் நம் மனமும் உடலும் உற்சாகம் அடையும். பச்சைப் பசேல் காய்கறி தோட்டத்தைப் பார்த்தால் மன உளைச்சல் குறையும்’’ என்றார்.

  • சிறப்புரையாற்றிய தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி முன்னாள் முதல்வர் குணசேகரன் ‘‘பாரம்பரிய உணவுகளையும், ரசாயனம் இல்லாத மரபு விவசாயத்தையும் கைவிட்டதால்தான் நோய்நோடிகளுக்கு ஆளாகி, மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. மாடித்தோட்டம் எந்தளவுக்கு அவசியமோ அதே அளவிற்கு நீர்நிலைகள் மீட்பும் அவசியமானது’’ என்றார்.

 

  • மாடித்தோட்டம் குறித்து பயிற்சி அளித்த கனகராஜ், ‘‘நிலங்களில் விளையக்கூடிய எல்லா வகையான காய்கறிகளையுமே மிக எளிமையாக மாடித்தோட்டத்தில் வளர்க்கலாம். இது என்னுடைய நேரடி அனுபவம். சிமெண்ட், மண் தொட்டிகளைவிட தார்பாயில் செய்யப்பட்ட பைகள் கனம் குறைவானது. மாடிக்கு பாதுகாப்பானது. இடம், மண் மாற்றுவதற்கு இது எளிதானது. பழைய தண்ணீர் பாட்டில், ஷூக்கள், முட்டை ஓடுகள் பயன்படுத்தி புதினா, மல்லித்தழை, வெந்தயக்கீரை வளர்க்கலாம் ’’ என்றவர் பல்வேறு தொழில்நுட்பங்ளை விவரித்தார்.

 

  • காளான் வளர்ப்பு பயிற்சி அளித்த சேகரன், ”மக்கக்கூடிய அனைத்து தாவரக்கழிவுகளிலும் காளான் வளர்க்கலாம். ஒரு ஏக்கர் நெல் சாகுபடியில் 300-600 கிலோ வைக்கோல் கிடைக்கும். இதன் விலைமதிப்பு அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான். ஆனால், இதை பயன்படுத்தி காளான் வளர்த்தால் 3-6 மாதங்களில் 30 ஆயிரம் ரூபாய்க்கு மேல் வருமானம் எடுக்கலாம். வீடுகளில் எளிமையாக வளர்க்க சிப்பி காளான், பால் காளான் ஏற்றது’’ என்றார்.

 

  • நீர்நிலைகள் மீட்பு குறித்து பேசிய விமல்நாதன், ‘‘கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்றால், குளங்களை மீட்பது கோடானு கோடி புண்ணியம்’’ என்றவர் சட்ட வழிமுறைகள் குறித்து விவரித்தார்.

 

  • இதே தலைப்பில் பேசிய முத்துப்பேட்டை முகமது மாலிக், ‘‘அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டும் நீர்நிலைகளை ஆக்கிரமிக்கவில்லை. இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ ஸ்தலங்களும் ஆக்கிரமித்துள்ளன. இது அந்த கடவுள்களுக்கே பொறுக்காது’’ என்றவர் குளத்தை மீட்டெடுத்த தனது நீதிமன்ற அனுபவத்தை விவரித்தார்.

 

  • ‘‘கோவில்களின் நகரம்னு எங்களோட கும்பகோணத்தை அழைக்கிறது வழக்கம். இனிவரும் காலங்கள்ல மாடித்தோட்டங்களின் நகரம் என்ற பேரும் எங்க ஊருக்கு வரப்போகுது. அந்தளவுக்கு இந்த பயிற்சிக் கருத்தரங்கம் எங்க ஊர் மக்கள் மனசுல ஆர்வத்தை ஆழமா விதைச்சிடுச்சி. எளிமையான தொழில்நுட்பங்கள் நம்பிக்கையை கொடுத்திருக்கு. மூன்று வகுப்புகளுமே ரொம்பவே பயனுள்ளதா இருந்துச்சு. உணவு ஏற்பாடுகளும் ரொம்ப சிறப்பா இருந்துச்சு. பசுமை விகடனுக்கும், கும்பகோணம் ரோட்டரி சங்கத்துக்கு மனதார நன்றி தெரிவிச்சிக்கிறோம்” என வாசகர்கள் நெகிழ்ச்சியோடு விடைபெற்றார்கள்.