ஆட்சி அதிகாரங்கள்

  • இந்தியக் குடியரசுத் தலைவருக்கு ஏராளமான அதிகாரங்கள் உள்ளன.
  • பெரும்பான்மையானவை, பெயரளவிலான அதிகாரங்களாகும்.
  • வழக்கமாக குடியரசுத் தலைவர் பிரதம அமைச்சரின் ஆலோசனைப்படியே ஆட்சி செய்ய வேண்டும். அசாதாரணமான சூழலில் குடியரசுத் தலைவர் தன் விருப்புரிமை (Discretion) அதிகாரத்தைப் பயன்படுத்துவார்.
  • குடியரசுத் தலைவர் இந்திய நாட்டின் தலைவர். எனவே ஆட்சி அதிகாரங்கள் அனைத்தும் இவரிடம் உள்ளது.
  • இவரது ஆட்சி அதிகாரங்கள் நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம் வரை உள்ளது.
  • அரசாங்கம் செய்து கொள்ளும் உடன்படிக்கைகளும், ஆட்சி அதிகாரங்களும் இவருக்கு உட்பட்டவை.
  • நாட்டின் தலைவர் என்ற நிலையில் மத்திய அரசாங்கச் சட்டங்களை நடைமுறைப்படுத்த மாநிலங்களுக்கு உத்தரவிடும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உண்டு.

நிர்வாக அதிகாரங்கள் (Administrative Powers)

  • இந்திய நாட்டின் அனைத்து நிர்வாக நியமனங்களும், உத்தரவுகளும், அறிவுறுத்தல்களும் குடியரசுத் தலைவர் பெயரிலேயே வெளியிடப்படுகின்றன.
  • பிரதமர், அமைச்சர்கள், அட்டர்னி ஜெனரல், தணிக்கைத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மாநில ஆளுநர்கள், அனைவரும் குடியரசுத் தலைவரால் நியமனம் செய்யப்படுகின்றனர்.
  • இதைப்போலவே மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சில், மத்திய தேர்வாணையம், நிதிக் கமிஷன் போன்ற நிர்வாக ஆணையங்களை நியமிக்கும் அதிகாரமும் குடியரசுத் தலைவருக்கு உள்ளது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.