State Governor | TNPSC | TET Study Materials | மாநில ஆளுநர்
Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  • மாநிலச் செயலாட்சித் துறையின் தலைமைப் பொறுப்பினை வகிப்பவர் ஆளுநர் ஆவார்.
  • மைய அரசின் ஆலோசனைப்படி 5 ஆண்டுகளுக்குக் குடியரசுத் தலைவரால் ஆளுநர் நியமிக்கப்படுகிறார்.
  • 35 வயது நிரம்பிய இந்தியக் குடிமகன் / குடிமகள் ஆளுநர் நியமனத்திற்குத் தகுதியானவர் ஆவார்.
  • குடியரசுத் தலைவரைப் போன்று மாநிலத்தின் தலைவர் ஆளுநர் ஆவார்,
  • மாநில ஆட்சி ஆளுநரின் பெயரிலேயே நடைபெறுகிறது.
  • மாநில அமைச்சரவையின் ஆலோசனைப்படி எல்லா விதமான ஆட்சி அதிகாரங்களையும் ஆளுநர் செயல்படுத்துவார்.
  • பொதுவாக ஒவ்வொரு மாநிலமும் ஒரு ஆளுநரைக் கொண்டிருக்க வேண்டுமென்றாலும், 7-வது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் 1956-ன்படி ஒரு ஆளுநர் ஒன்றுக்கு மேற்பட்ட மாநிலங்களுக்கும் ஆளுநராக நியமிக்கப்படலாம்.
  • மாநில ஆளுநரை குடியரசுத் தலைவரே நியமிக்கிறார். இவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். எனினும் பதவிக்காலத்திற்கு முன்னரே பதவிலிருந்து குடியரசுத் தலைவரால் நீக்கப்படலாம்.
Click Here To Get More Details