எழுந்து நில் இந்தியா திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for Stand up for the India project approved

 

  • பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அமைச்சரவை தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மற்றும் பெண்கள் தொழில் தொடங்க உதவி செய்யும் “எழுந்து நில் இந்தியா” என்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ஒரு வங்கிக் கிளைக்கு இரு திட்டங்கள், ஒரு கிளைக்கு ஒரு பிரிவு என்ற அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். குறைந்தது5 லட்சம் மக்களுக்கு இத்திட்டம் பயன்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

  • 2.5 லட்சம் மக்களை சென்றடைய 36 மாதங்கள் என்ற கால அளவு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இத்திட்டத்தின் பலன்கள் வருமாறு :

 

  • சிறு தொழில் வளர்ச்சி வங்கி மூலமாக மறு முதலீட்டுக்காக முதல் கட்டமாக 10,000 கோடி.

 

  • தேசிய உத்தரவாத நிறுவனம் மூலமாக கடன் உத்தரவாதத் திட்டம்.

 

  • கடன் பெறுபவர்களுக்கு கடன் பெறுவதற்கு முன்னும், கடன் பெறுகையிலும் ஆதரவு. சேவை வழங்குதல், இணைய தளத்தில் பதிவு செய்தல், இணைய சந்தைகளில் பங்கெடுக்க வைத்தல், சிக்கல்களை தீர்க்க பயிற்சி அளித்தல் உள்ளிட்டவை இத்திட்டம் மூலம் செயல்படுத்தப்படும்.

 

இத்திட்டத்தின் விவரங்கள் பின் வருமாறு :

 

  • இத்திட்டத்தின் நோக்கம், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண்களுக்கு உதவி செய்தல்.

 

  • தாழ்த்தப்பட்ட , பழங்குடியின மற்றும் பெண்களால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு 10 லட்சம் முதல் 100 லட்ச ரூபாய் வரை கடன் வழங்குதல், கடனின் காலகட்டத்தை 7 ஆண்டுகளாக அதிகரித்தல், விளிம்பு நிலை பிரிவினருக்கு உதவுதல், ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்கள்.

 

  • கடன் பாதுகாப்புக்காக நிதி சேவைகள் துறை மூலமாக, கடன் பாதுகாப்பு திட்டம் ஒன்றை உருவாக்கி, அதை தேசிய கடன் உத்தரவாத நிறுவனம் மூலமாக செயல்படுத்துதல்.

 

  • கடன் பெறுகையில் செலுத்த வேண்டிய முன்பணம் 25 சதவிகிதம் ஆகும். மாநில அரசின் திட்டங்களோடு இணைக்கையில், பெரும்பாலானோருக்கு செலுத்த வேண்டிய முன்பணம் கணிசமாக குறையும். காலப்போக்கில், கடன் பெறுபவரின் கடன் வரலாறு, கடன் துறையின் மூலமாக பதிவு செய்யப்படும்.

 

பின்னணி :

 

“எழுந்து நில் இந்தியா” திட்டம் பிரதமர் அவர்களால், 15 ஆகஸ்ட் 2015 சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டது. எழுந்து நில் இந்தியா திட்டம், நிதிச் சேவைகள் துறையால், தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பெண் தொழில் முனைவோருக்காக செயல்படுத்தப்படும்.

 

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]