Spleen Work In Human Body | TNPSC | TET Study Materials

மண்ணீரலின் வேலைகள்

Review Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

மண்ணீரலின் வேலைகள் :

  • மிகவும் வயதான நிலையிலுள்ள இரத்தச் செவ்வணுக்கள் அழிக்கப்படும் இடமாக மண்ணீரல் செயல்படுகிறது.
  • செவ்வணு உற்பத்திக்கு மாற்று மையங்களாகவும் செவ்வணுக்களைத் தேக்கி வைக்கும் உறுப்பாகவும் மண்ணீரல் செயல்படுகிறது.
  • இரத்த ஒட்டப்பாதையில், நுண்கிருமிகள் போன்ற அயல்பொருட்களை வடிகட்டும் உறுப்பாக மண்ணீரல் செயல்படுகிறது.
  • இரத்தம் வழியாக வரும் ஆண்டிஜன்களுக்கெதிராக தடைகாப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுவதே மண்ணீரலின் முக்கிய பணியாகும்.

ஆண்டிஜன்கள் (Antigens):

  • அயல்பொருள்கள் ஆண்டிஜன்கள் எனப்படுகின்றன இவற்றிற்கு இம்யுனோஜன்கள் என்ற ஒரு பெயரும் உண்டு.
  • எனினும் இவ்விரு வார்த்தைகளும், வெவ்வேறு பொருளுடையன. இம்யுனோஜன் என்பது தடைகாப்பு நடவடிக்கையைத் (Immune/immunogenicity) தூண்டும் மூலக்கூறாகும். மாறாக ஆண்டிஜன் என்பது ஆண்டிபாடியுடனோ, செல்வழி நோய் தடைகாப்பில் ஈடுபடும் செல்களுடனேயோ வினைபுரியும் மூலக்கூறாகும்.
Click Here To Get More Details