ஒளிமூலங்கள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan physics

 • எந்தெந்தப் பொருள்கள் எல்லாம் நமக்கு ஒளியைத் தருகின்றனவோ அவற்றை ஒளிமூலங்கள் (Light Sources) என்கிறோம்.

ஒளிமூலங்கள் வகைகள்

 1. இயற்கை ஒளிமூலங்கள்
 2. செயற்கை ஒளிமூலங்கள்

இயற்கை ஒளிமூலங்கள்

 • ஒளியின் முதன்மை மற்றும் இயற்கை ஒளிமூலம் சூரியன்.
 • இயற்கை ஒளிமூலங்கள்: சூரியன் மின்மினிப்புச்சி, ஜெல்லி மீன்.

செயற்கை ஒளிமூலங்கள்

 • மனிதனால் உருவாக்கப்பட்ட சில பொருள்களும் நமக்கு ஒளியைத் தருகின்றன. இவற்றைச் செயற்கை ஒளி மூலங்கள் என்கிறோம்.
 • செயற்கை ஒளிமூலங்கள்: அகல் விளக்கு, அலங்கார விளக்கு, சிம்னி விளக்கு.

ஒளிரும் பொருள்கள்

 • தாமாக ஒளியைத் தரும் பொருள்களை ஒளிரும் பொருள்கள் என்கிறோம்.

ஒளிராப் பொருள்கள்

 • தாமாக ஒளியைத் தராத பொருள்களை ஒளிராப் பொருள்கள் என்கிறோம்.

பொருள்களைப் பார்க்க நமக்கு,

 1. ஒளி மூலம்
 2. பார்க்க வேண்டிய பொருள்
 3. பொருளிலிருந்து வரும் ஒளியைக் கண்டுணரக் கண்கள் ஆகியவை அவசியம்
 • சந்திரன் பொலிவுடன் தெரிந்தாலும் அது ஒளிராப் பொருள். அது சூரியனிடமிருந்தே ஒளியைப் பெற்று ஒளிர்கின்றது.
 • சூரியஒளி புவியை வந்து அடைவதற்கு 8 நிமிடம் 20 வினாடி ஆகிறது.
 • சூரிய ஒளியை வெறும் கண்களால் நேரிடையாகப் பார்க்கக் கூடாது. பார்வை பாதிக்கப்படக்கூடும்.

ஒளியின் பாதை

 • ஒளி நேர்கோட்டில் செல்லும் பண்பைப் பெற்று ஒளி நேர்க்கோட்டில்தான் செல்கிறது.

ஒளி ஊடுருவும் பொருள்கள் (Transparent Objects)

 • தம்வழியே ஒளியைச் செல்ல அனுமதிக்கும் பொருள்களை ஒளி புகும் பொருள்கள் அல்லது ஒளி ஊடுருவும் பொருள்கள் (Transparent Objects) என்கிறோம்.

எடுத்துக்காட்டு:

கண்கண்ணாடி, தூயநீர், தூயகாற்று

ஒளிகசியும் பொருள்கள் (Translucent Objects)

 • ஒரு பகுதி ஒளியை மட்டும் ஊடுருவ அனுமதிக்கும் பொருள்களை ஒளிகசியும் பொருள்கள் (Translucent objects) என்கிறோம்.

எடுத்துக்காட்டு:

துசிகள் நிறைந்த காற்று, பனிமூட்டம், சொரசொரப்பான கண்ணாடி, எண்ணெய் தடவிய காகிதம்.

 

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]