சூளாமணி

tamil-grammar

  • இதன் ஆசிரியர் வர்த்தமான தேவர் எனப்படும் தோலாமொழித் தேவர்.
  • 12 சருக்கங்களில் 2131 விருத்தப்பாக்களால் இயற்றப்பட்டது இந்நூல்.
  • ஆருகத மகாபுராணத்தைத் தழுவியது.
  • பாகவதத்தில் வரும் பலராமன், கண்னன் போன்று இக்காப்பியத்திலும் திவிட்டன் விசயன் என்னும் இரு வடநாட்டு வேந்தர்களின் வரலாறாக இந்நூல் உள்ளது.
  • பாகவதமும் சூளாமணியும் கதை நிகழ்ச்சிகளில் ஓரளவு ஒத்து உள்ளன.
  • சிரவணபெல்கோலா கல்வெட்டில் இந்நூல் பற்றிய குறிப்பு உள்ளது.
  • இந்நூலின் பாயிரம் தரும் குறிப்பின்படி, கி.பி.ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த அவனி சூளாமணி மாறவர்மன் என்னும் பாண்டியன் அவைக்களத்தில் அரங்கேறியது என்று தெரிகிறது.
  • இது சிறுகாப்பிய வகையில் இருந்தாலும் பெருங்காப்பியப் பண்புகள் மிகுந்த நூலாகக் கருதப்படுகிறது.
  • ஐஞ்சிறு காப்பியங்களுள்ஒன்றான சூளாமணி ஒரு சமண சமயம் சார்ந்த நூலாகும்.
  • சமண சமயத்தைச் சார்ந்த தோலாமொழித்தேவர் இதனை இயற்றினார்.
  • பத்தாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டயாப்பருங்கல விருத்தியுரையில் சூளாமணிப் பாடல்கள் எடுத்தாளப்பட்டுள்ளன. எனவே, இந்நூலின் காலம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது எனலாம்.
  • ஜினசேனர்என்பவர் வடமொழியில் எழுதிய ஸ்ரீபுராணம் எனப்படும் ஆரூகத மகாபுராணம் என்னும் நூலைத்தழுவித் தமிழில் ஆக்கப்பட்டதே இந்நூல்.
  • 12சருக்கங்களாகப் பிரிக்கப்பட்ட 2131 பாடல்கள் இந்நூலில் உள்ளன.
  • விருத்தப்பாவால் ஆனது.
  • கதை கூறும் போக்கில்சீவக சிந்தாமணியை ஒட்டியுள்ளது.

நூலாசிரியர்               

  • சூளாமணியை இயற்றியவர்தோலாமொழித்தேவர்.
  • இவர் சமண சமயத்தவர். காலம் 10-ஆம் நூற்றாண்டிற்கு முன்.
  • இவரை விசயன் என்ற மன்னர் ஆதரித்து வந்துள்ளான். மைசூர் மாநிலத்தில் உள்ள சிரவணபெலகோலாக்கல்வெட்டு இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

 

Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.