சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அறிவியல் பெயர், பொதுவான பெயர் மற்றும் தமிழ்ப் பெயர்

Review Score0

Image result for group of plants and animals

 

சில தாவரங்கள் மற்றும் விலங்குகளின் அறிவியல் பெயர், பொதுவான பெயர் மற்றும் தமிழ்ப் பெயர்

.எண் அறிவியல் பெயர் பொதுவான பெயர் தமிழ் பெயர்
1.  பிராசிக்கா ஓலரேசியா Cabbage முட்டைக்கோசு
2.  சையமாப்ஸிஸ் டெட்ரகோலோபா Cludter bean கொத்தவரை
3.  அராக்கிஸ் ஹைப்போஜியா Ground nut நிலக்கடலை
4.  ஒரைசா சட்டைவா Rice (paddy) நெல்
5.  வாசெல்லா ருப்ரா Spinach பசலக்கீரை
6.  குரோட்டலேரியா ஜன்ஸியா Sunn-hemp சணப்பை
7.  ஜக்கார்னியா கிராஸ்ஸிபெஸ் Water hyacinth ஆகாயத்தாமரை
8.  டிரிட்டிக்கம் வல்கேர் Wheat கோதுமை
9.  இம்ப்பேஷன்ஸ் பால்சாமினா Balsam காசித்தும்பை
10.  யூட்ரிகுலேரியா பாலிவலாய்டஸ் Bladderwort யூட்ரிகுலேரியா
11. கொரியாண்ட்ரம் சட்டைவம் Coriander கொத்தமல்லி
12. டராக்ஸாக்கம் அஃபிஷினேல் Dandelion டேண்டலியான்
13. கஸ்குட்டா ரிஃப்ளெக்ஸா Dodder plant அம்மையார் கூந்தல் (அ) சடதாரி
14. மானோட்ரோபா யூனிஃப்ளோரா Indian pipe புகையிலைக் காளான்
15. அகாரிகஸ் கேம்பஸ்ட்ரிஸ் Mushroom நாய்க்குடை
16. அல்லியம் சீபா Onion வெங்காயம்
17. நெப்பந்தஸ் காஸியானா Pitcher plant பிட்சர் தாவரம்
18. சொலானம் டியூபரோசம் Potato உருளைக்கிழங்கு
19. குரோக்கஸ் சட்டைவஸ் Saffron குங்குமப்பூ
20. டிராசீரா பர்மானியை Sundew plant எறும்புத்திண்ணி (சூரியப்பனித்துளித் தாவரம்)
21. மைமோசா புடிகா Touch me not plant (Sensitive plant) தொட்டாச்சுருங்கி (தொட்டாச் சிணுங்கி)
22. அமீபா புரோட்டியஸ் Amoeba அமீபா
23. பாரமீசியம் காடேட்டம் Paramecium பாரமீசியம்
24. ஹைடிரா வல்கேரிஸ் Hydra ஹைடிரா
25. ஒபீலியா ஜெனிகுலேட்டா Jelly fish நுங்குமீன்
26. பெரிப்ளணேட்டா அமெரிக்கானா Cockroach கரப்பான்பூச்சி
27. ஊச்சரேரியா பான்கிராஃப்டி யானைக்கால் நோய்க்கிருமி
28. பைலா குளோபோசா Snail நன்னீர் நத்தை
29. லமெல்லிடன்ஸ் லமெல்லிடன்ஸ் Freshwater mussel நன்னீர் மட்டி
30. ஆஸ்டிரியஸ் ரூபென்ஸ் Star fish நட்சத்திர மீன்
31. நாஜா நாஜா Cobra நல்ல பாம்பு
32. பாவோ கிரைஸ்டாட்டஸ் Peacock மயில்
33. டைட்டோ ஆல்பா Owl ஆந்தை

முக்கிய தினங்கள்

 • உலக அறிவியல் தினம் –      பிப்ரவரி 28
 • உலக ஆரோக்கிய தினம் –      ஏப்ரல் 7
 • உலக புற்றுநோய் தினம் –      பிப்ரவரி 4
 • சர்வதேச குடும்பதினம் –      மே 15
 • மருத்துவர்கள் தினம் –      ஜூலை 1
 • உலக உணவு தினம் –      அக்டோபர் 16
 • உலக நீர் தினம் –      மார்ச் 22
 • தேசிய ஆற்றல் சேமிப்பு நாள் –      டிசம்பர் 14
 • உலக சுற்றுச்சுழல் நாள் –      ஜூன் 5
 • உலக எய்ட்ஸ் தினம் –      டிசம்பர் 1
 • உலக நிலப்பரப்பு தினம் –      பிப்ரவரி 2
 • உலக காடுகள் தினம் –      மார்ச் 21
 • புவி தினம் –      ஏப்ரல் 22
 • இயற்கை வன தினம் –      அக்டோபர் 5
 • இயற்கை பாதுகாப்பு தினம் –      நவம்பர் 25
 • உலக மலர்கள் தினம் –      செப்டம்பர் 13
 • போதைப்பொருள் தடுப்பு தினம் –      ஜூன் 26
 • கை கழுவும் நாள் –      அக்டோபர் 15

நிலக்கரி

 • கார்பன் டை ஆக்ஸைடை அதிக அளவு வெளியிடுவது நிலக்கரி மட்டுமே.
 • நிலக்கரி தொழிற்சாலைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும் இரண்டாம் நிலை பயன்பொருட்கள் கரி, கரித், தார், கரி, வாயு.
 • நிலக்கரியிலுள்ள கந்தகத் துகள்கள் அமில மழை உருவாகக் காரணமாகின்றின.

பெட்ரோலியம்

 • பெட்ரோலியம் நச்சுத்தன்மை கொண்ட தீப்பற்றி எரியக்கூடிய ஹைட்ரோகார்பன்கள் மற்றும் சில கரிமப் பொருட்களால் ஆன ஒரு கலவை.
 • பெட்ரோலியம் ‘கறுப்புத் தங்கம்’ என அழைக்கப்படுகிறது.
 • பல நாடுகள் இணைந்து பெட்ரோலியத்தின் பயன்பாட்டைக் குறைந்துக்கொள்ள ஒப்புக்கொண்டுள்ள ஒப்பந்தம் கியூட்டோ ஒப்பந்தம

மாற்றங்கள்

 • சில மணிநேரம்,நாட்கள்,மாதங்கள் அல்லது ஆண்டுகள் என நீண்ட நேரம் நிகழும் மாற்றம் மெதுவான மாற்றம்.
  • எ.கா. குழந்தை வளர்த்தல், இரும்பு துருப்பிடித்தல், விதை முளைத்து மரமாதல், உணவு சமைத்தல், பால் தயிராதல்.
 • சில நொடிகளில் அல்லது சில நிமிடங்களில் நிகழும் மாற்றம் வேகமான மாற்றம்.
  • எ.கா. காகிதம் எரிதல், பட்டாசு வெடித்தல், மின்சக்தியான விளக்கு ஒளிர்தல்
 • சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட மரங்கள் பற்பல மாற்றங்களுக்கு உட்பட்டு நிலக்கரியாக மாறுகிறது.
 • மீள் மாற்றங்கள் :இவ்வகை மாற்றங்களால்,மாற்றமடைந்த பொருட்கள் மீண்டும் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பும்.
  • எ.கா. பனிக்கட்டி உருகுதல், நீர் ஆவியாதல்.
 • மீளா மாற்றங்கள் : மாற்றமடைந்த பொருட்கள் தங்கள் இயல்பு நிலைக்கு மீண்டும் திரும்ப இயலாது.
  • எ.கா. பால் தயிராதல், முடி நரைத்தல்.
 • விரும்பத்தக்க மாற்றங்கள் : மழை பொழிதல், காய்கனியாதல் போன்ற மாற்றங்கள் விரும்பத்தக்க மாற்றங்கள்.
 • விரும்பத்தகாத மாற்றங்கள் : உணவு கெட்டுப்போதல், எரிமலை வெடித்தல் போன்ற மாற்றங்கள் விரும்பத்தகாத மாற்றங்கள்.
 • கால ஒழுங்கு மாற்றங்கள் :குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நிகழும் மாற்றங்கள் கால ஒழுங்கு மாற்றங்கள்.
  • எ.கா. இதயத் துடிப்பு, இரவு பகல் தோன்றுதல், கடிகார ஊசல்.
 • கால ஒழுங்கற்ற மாற்றங்கள் :குறிப்பிட்ட கால இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறாத மாற்றங்கள் கால ஒழுங்கற்ற மாற்றங்கள் எனப்படும்.
  • எ.கா. நிலநடுக்கம், எரிமலை வெடித்தல், மண் சரிவு
 • வெப்பம் உமிழ் மாற்றங்கள் :சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உமிழப்படுகிறது.இவ்வகை மாற்றங்கள் வெப்ப உமிழ் மாற்றங்கள் ஆகும்.
  • எ.கா. தீக்குச்சி எரிதல், தூய்மையாக்கி அல்லது சலவை சோடா நீரில் கரைதல்
 • வெப்பம் கொள் மாற்றங்கள் :சில மாற்றங்கள் நிகழும்போது வெப்பம் உறிஞ்சப்படுகிறது.இவ்வகை மாற்றங்கள் வெப்பம் கொள் மாற்றங்கள் ஆகும்.
  • எ.கா. குளுக்கோஸ், அமோனியம் குளோரைடு நீரில் கரைதல்.

சுற்றுச்சூழல்

 • மக்கும் குப்பைகள் – பாக்டீரியா – பூஞ்சைகள் – மண்புழு போன்றவற்றின் செயல்பாடுகளால், சிதைக்கப்படும் குப்பைகள் . எ.கா. : இலைகள், வேளாண் கழிவுகள், விலங்குக் கழிவுகள், காய்கறிகள், பழங்கள், தோல், விதை மற்றும் கொட்டைகள்.
 • மக்காத குப்பைகள் – தொழிற்சாலைக் கழிவுகள், நெகிழிப் பொருட்கள், உலோகங்கள் போன்ற நுண்ணுயிரிகளால் சிதைக்க முடியாதவை.
 • கழிவுப் பொருட்களை அகற்றும் முறைகள் :
  • நிலத்தில் நிரப்புதல் – நிலத்தில் காணப்படும் இயற்கைச் குழிகள் அல்லது தோண்டப்பட்ட பள்ளங்களில் கழிவுகளை நிரப்பி மண்ணால் மூடுதல்
  • எரித்துச் சாம்பலாக்குதல் – மனித உடல் கழிவுகள், மருத்துவக் கழிவுகள் (தூக்கிஎறியப்படும் மருந்துகள், நச்சுத் தன்மை கெண்ட மருந்துகள், இரத்தம், சீழ், போன்றவை இம்முறையில் அழிக்கப்படுகின்றன.)
  • உரமாக மாற்றுதல் : மக்கும் குப்பைகள் நுண்ணுயிரிகளின் செயல்பாடுகளால் உரமாக மாறும் நிகழ்ச்சி.
  • பயன்பாட்டைக் குறைத்தல் : நீண்ட காலம் பயன்தரும் பொருட்களைத் தேர்ந்தெடுத்தல், உதாரணமாக பயன்பாட்டுக்குப் பின் தூக்கியெறியும், பேனாவுக்குப் பதில் மை நிரப்பும் பேனாவைப் பயன்படுத்துதல்.
  • மீண்டும் பயன்படுத்துதல் – நெகிழிப் பைகளுக்குப் பதிலாகத் துணிப் பைகளைப் பயன்படுத்துதல்.
  • மறுசுழற்சி செய்தல் – பழைய துணிகளைத் காகிதத் தயாரிப்பில் பயன்படுத்துதல் சில வகை நெகிழிகளை உருக்கி, நெகிழி அட்டைகள், நீர் பாய்ச்சும் குழாய்கள் போன்றவை தயாரித்தல்.
  • 3 ‘R’ முறைகள் முக்கியப்பங்கு வகிக்கின்றன அவை – (Reducing, Reusing, Recyling) மீண்டும் பயன்படுத்துதல், மறுசுழற்சி செய்தல், பயன்பாட்டைக் குறைத்தல்.
  • நெகிழியை எரிக்கும்போது டையாக்ஸின் என்ற நச்சு வாயு உருவாகி வெளியேறுகிறது
 • திடக்கழிவு மேலாண்மைக் கோபுரம்
  • பயன்பாட்டைக் குறைத்தல்
  • மீண்டும் பயன்படுத்துதல்
  • மறுசுழற்சி செய்தல்
  • உரமாக மாற்றுதல்
  • எரித்தல்
  • நிலத்தில் நிரப்புதல்
 • மீண்டும் பயன்படுத்துதல்
 • கழிவுத் தாளை (54%) மறுபடியும் பயன்படுத்தலாம்
 • கண்ணாடி (20%) மறுபடியும் பயன்படுத்தலாம்
 • உலர்பனி அல்லது சில்வர் அயோடைடு தகள்களை மழை மேகங்கள் மீது தூவினால் சிலசமயம் மழைப்பொழிவு ஏற்படும்.
 • உப்பு நீரைக் குடிநீராக்கல் (தலைகீழ் சவ்வூடுபரவல்) உப்பு நீரைக் குடிநீராக்கலில் ஆவியாதல் மற்றும் மீண்டும் குளிர்வித்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
LATESTS GOVERNMENT JOBS