இந்திய ஐந்தாண்டு திட்டத்தின் பற்றிய சில தகவல்கள்

Image result for Some information about Indian five-year plan

 

முதல் ஐந்தாண்டு திட்டம்1951 – 1956) ஹரார்டு டோமா மாதிரி திட்டம்
● முன்னுரிமை வேளாண்மை வளர்ச்சி (நீர்மின் திட்டம், நீர்ப்பாசன வசதிகளை பெருக்குதல்)
● திட்டம் வெற்றியடைந்தது சமுதாய முன்னேற்ற திட்டம், குடும்ப கட்டுப்பாட்டுத் திட்டம் 1952ல் தொடங்கப்பட்டது.

இரண்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1956 – 1961) மஹலனோபிஸ் மாதிரி
● முன்னுரிமை, அடிப்படை மற்றும் கனரக தொழில்கள் வளர்ச்சி.
● பிலாய், துர்காபூர், ரூர்கேலா இரும்பு எஃகு தொழிற்சாலைகள் உருவாக்கப்பட்டன.
● பெரம்பூர் இரயில் பெட்டித் தொழிற்சாலை உருவாக்கப்பட்டது

மூன்றாம் ஐந்தாண்டு திட்டம்: (1961 – 1966)
● முன்னுரிமை பெரும் இயந்திரங்களை நம் நாட்டிலேயே உருவாக்குதல்.
● வேளாண்மையில் சுய தேவையைப் பூர்த்தி செய்தல்.
● பாகிஸ்தான், சீனாவுடன் போர் மற்றும் பருவக்காற்று பொய்த்ததால் வறட்சி காரணமாக தோல்வி அடைந்து.
● தானியங்களை பாதுகாப்போம் என்ற திட்டம் தொடங்கப் பட்டது – 1965.
● பசுமை புரட்சி அறிமுகம் செய்யப்பட்டது (1965)

மூன்று ஓராண்டு திட்டங்கள் (1966 – 69)
● 1966 ரூபாயின் மதிப்பு குறைக்கப்பட்டதால் ஏற்றுமதி அதிகரித்து, இறக்குமதி குறைந்தது
● விலைவாசி குறைந்தது

நான்காம் ஐந்தாண்டு திட்டம்: (1969 – 1974)
● தற்சார்பு அடைதல், ஏற்றுமதி அதிகரித்தல்
● நீதியுடன் கூடிய வளர்ச்சி
● விஜய நகரம், சேலம், விசாகப்பட்டினம் இரும்பு எஃகு தொழிற்சாலைகள் நிறுவப்பட்டது.

ஐந்தாம் ஐந்தாண்டு திட்டம்: (1974 – 1979)
● வறுமையை ஒழித்தல்
● ஓராண்டு முன்னதாகவே 1978ல் ஜனதா அரசால் நிறுத்தப்பட்டது.
● 20 அம்சத் திட்டம் (1975) அறிமுகப்படுத்தப்பட்டது
● தேசிய குறைந்தபட்சத் தேவை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது
● உருளல் திட்டம் (1978 – 80) Rolling Plan
● TRYSEM – 1979 தேசிய கிராமப்புற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் செயல்படுத்தப்பட்டது

ஆறாம் ஐந்தாண்டு திட்டம்: (1980 – 1985)
● ஏழ்மையை போக்க அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்
● தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
● ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி திட்டம் (1980)

ஏழாம் ஐந்தாண்டு திட்டம்: (1985 – 1990)
● வேலை வாய்ப்புகளை அதிகப்படுத்துதல்
● ஜவஹர் ரோஜ்கார் யோஜனா (1989)
● வேலைக்கு உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டது
● ஓராண்டு திட்டங்கள் (1990 – 1992)

எட்டாம் ஐந்தாண்டு திட்டம்: (1992 – 1997)
● நோக்கம்:
1. மனித வள முன்னேற்றம்
2. மக்கள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
● மொத்த உள்நாட்டு உற்பத்தி, இலக்கை விட மிஞ்சியது
● தாராளமயமாக்கப்பட்ட புதிய பொருளாதாரக் கொள்கை செயல்படுத்தப்பட்டது.

ஒன்பதாவது ஐந்தாண்டு திட்டம்: (1997 – 2002)
● சமுதாய நீதி மற்றும் சமத்துவத்துடன் ஆன வளர்ச்சி.
● மக்கள் பங்கு பெறும் அமைப்புகளை (மகளிர் சுய உதவிக் குழு, கூட்டுறவுச் சங்கங்கள்) முன்னேறச் செய்தல்

பத்தாவது ஐந்தாண்டு திட்டம்: (2002 – 2007)
● எட்டு சதவீதம் வளர்ச்சியை எட்டுதல்
● ஓராண்டுக்கு 10 மில்லியன் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல்
● அனைவருக்கும் கல்வி அளித்தல்.
● புதுப்பிக்கப்பட்ட 20 அம்ச திட்டம் தொடங்கப்பட்டது.

பதினோறாவது ஐந்தாண்டு திட்டம்: (2007 – 2012)
● வேளாண்மை வளர்ச்சி விகிதத்தை 4% ஆக உயர்த்துதல்
● 70 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாக்குதல்
● குழந்தை இறப்பு விகிதம் 1/1000 மாக குறைத்தல்
● காடுகள் சதவீதம் 5% ஆக உயர்த்ததுல்
● அனைவருக்கும் சுத்தமான குடிநீர் அளித்தல்

( thank u natraj tnpsc Institute)

 

MAANAVAN PEDIA STATE AND GOVERNMENT PLANNING WORLDS AWARDS AND REWARDS MAANAVAN ARTICLE EXAM TIPS AUDIO CURRENT AFFAIRS TAMIL VIDEOS MATHS VIDEOS ONLINE TEST DAILY CURRENT AFFAIRS MONTHLY CURRENT AFFAIRS EXAM STUDY MATERIALS GOVERNMENT EXAM
No Comments

Sorry, the comment form is closed at this time.