இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் Art (76)

இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் Art (76)

இந்திய அரசாங்கத்திற்கு சட்ட சம்பந்தமான விஷயங்களில் ஆலோசனை வழங்கவும் சட்ட சம்பந்தமாக இடப்படும் பிற பணிகளைக் செய்யவும் குடியரசுத் தலைவர் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞரை நியமனம் செய்கிறார்.

  • தகுதிகள் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
  • இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் உயர்நீதிமன்றத்தில் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் நீதிபதியாக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி இருக்க வேண்டும் அல்லது குடியரசுத் தலைவரின் பார்வையில் அவர் சிறந்த நீதிமானாக இருக்க வேண்டும்.
  • பதவிக்காலம் குடியரசுத் தலைவர் விரும்பும்வரை அவர் பதவியில் இருப்பார்.
  • இவர் இந்த எல்லைக்குள் உள்ள எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகி வாதாட உரிமையுண்டு.
  • நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கலந்து கொண்டு பேசுகின்ற உரிமையுடையவர் ஆவார். தீர்மானத்தின் மீது வாக்களிக்க உரிமை கிடையாது.

 

இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவர் (பிரிவு 148 – 151)

  • இந்தியாவிற்கு கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறைத் தலைவர் ஒருவர் இருக்க வேண்டும் என்று அவரை குடியரசுத் தலைவர் தன் கையொப்பமிட்ட மற்றும் முத்திரையிட்ட ஆணையால் நியமிக்க வேண்டும் என்றும் உச்சநீதி மன்ற நீதிபதிகளை நீக்குவதற்கான நடைமுறைபடிதான் அவரை நீக்க வேண்டும் என்று அரசியலமைப்பின் பிரிவு 148 கூறுகிறது.
  • ஒரு கணக்காளர் என்ற முறையில் இந்தியாவின் திரட்டு நிதியில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் அனைத்து தொகைகளின் மீதும் கட்டுப்பாடு வைத்திருப்பார்.
  • ஒரு தணிக்கையாளர் என்ற முறையில் மத்திய மாநில அரசால் செலவழிக்கப்படும் எல்லா தொகைகளையும் தணிக்கை செய்கிறார்.
  • மத்திய அரசு தொடர்பான கணக்குகளை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பார் மாநில அரசின் கணக்குகளையும் அறிக்கைகளையும் ஆளுநரிடம் சமர்ப்பிப்பார்.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.