சூரிய மின்சக்திக் சிறப்பம்சங்கள்

Review Score0

Image result for Solar Energy

 

தமிழ் நாடு சூரிய மின்சக்தி கொள்கை

 

  • தமிழகத்தில் மின் நிலையை சீரமைக்க, அடுத்த மூன்றாண்டுகளில், சூரிய சக்தி மூலம் 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வகையில், தமிழக சூரிய சக்தி மின் கொள்கையை, முதல்வர் ஜெயலலிதா 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 20ல் வெளியிட்டார்.

 

சிறப்பம்சங்கள்

 

  • தமிழகத்தை பொறுத்தவரை, ஆண்டுக்கு 300 நாட்கள், தெளிவான சூரிய ஒளி கிடைத்து வருகிறது. சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்க, தென் தமிழக பகுதிகள், நாட்டிலேயே மிகப் பொருத்தமான பகுதிகளாக விளங்குகின்றன. இதை கருத்தில் கொண்டும், தற்போது நிலவும் மின் பற்றாக்குறையை தீர்க்கும் விதமாகவும், சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க, தமிழக அரசு, “தமிழ்நாடு சூரிய சக்தி கொள்கை – 2012’யை உருவாக்கியுள்ளது

 

  • சூரிய சக்தி மூலம் அடுத்த மூன்றாண்டுகளில், ஆண்டுக்கு 1,000 மெகாவாட் வீதம், 3,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இலக்கு நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மாசுபடுவதை குறைத்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
    சூரிய சக்தி மின்சாரத்தை உருவாக்கும் முக்கிய பகுதியாக தமிழகத்தை உருவாக்குதல், உள்நாட்டிலேயே சூரிய சக்தி சாதனங்களை உருவாக்கும் வசதி, சூரிய சக்தி மின்சாரம் தொடர்பான, ஆய்வு மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துதல், புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்றவை இதன் முக்கிய நோக்கம்.

 

  • தமிழகத்தில், காற்றாலை மின்சாரத்தை சேமிப்பதற்கான வசதிகள் இல்லாத காரணத்தால், அதிகளவு உற்பத்தி செய்தும் சில நேரங்களில் பயன்படாமல் போய் விடுகிறது. பகல் நேரங்களில் அதிகளவு உற்பத்தி, தேவைப்படும் இடத்திலேயே உற்பத்தி செய்யப்படுவதால், இழப்பு தவிர்க்கப்படுதல், சேமிப்புக்கான வாய்ப்பு ஆகியவை சூரிய ஒளி மின்சாரத்தில் உள்ளன.இதை கருத்தில் கொண்டு தமிழகத்தில், சூரிய ஒளி மின்சாரத்தை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த, தமிழக அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. தமிழகத்தை, சூரிய மின்சக்தியில் முதலிடத்தில் கொண்டு வருவதற்கான நடவடிக்கையும் இதன் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

 

  • வீட்டு உபயோக மின் நுகர்வோர்கள் மேற்கூரை சூரியசக்தி அமைப்புக்களை நிறுவ ஊக்குவிக்கும் வகையில் மின் உற்பத்தி அடிப்படையிலான ஊக்கத்தொகை அளித்தல்.

 

  • அனைத்து புதிய அரசு கட்டடங்கள் / உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது கட்டாயமாக்கப்படும்.

 

  • தற்போதுள்ள அரசு மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டடங்களில் சூரிய சக்தி மேற்கூரை சாதனங்கள் அமைப்பது படிப்படியாக செயல்படுத்தப்படும்.

 

  • உள்ளாட்சி நிறுவனங்களின் அனைத்து தெரு விளக்குகள் மற்றும் குடிநீர் வழங்கும் அமைப்புகள் படிப்படியாக சூரிய சக்தியைக் கொண்டு இயக்கப்படும்.

 

  • பெரும் தொழிற்சாலைகள் மற்றும் உயர் அழுத்த மின் நுகர்வோர் குறிப்பிட்ட சதவீத மின்சாரத்தை சூரிய சக்தி மின்சாரத்திலிருந்து பயன்படுத்த வேண்டும்.

 

  • சூரிய சக்தி சாதனங்களைத் தயாரிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும்.
    சூரிய சக்தி மின் உற்பத்தியாளர்களுக்கு, மின் வரி செலுத்துவதில் இருந்தும், மின் வெட்டிலிருந்தும் விலக்களிக்கப் பட்டுள்ளது.

 

  • அதிக அளவு மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள், குறிப்பிட்ட அளவு சூரிய மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் என்பது உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. இதன் படி, சிறப்பு பொருளாதார மண்டலங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட, உயர் அழுத்த மின் இணைப்புகளை பயன்படுத்துவோர் மற்றும் வர்த்தக மின் இணைப்பு பெற்றிருப்போர், தாங்கள் பயன்படுத்தும் மின்சாரத்தில், 6 சதவீதத்தை சூரிய சக்தியில் இருந்து பயன்படுத்த வேண்டும்.இதற்கான கட்டமைப்புகளை அவர்கள் உருவாக்கிக் கொள்ளவோ, சூரிய மின் சக்தி உற்பத்தியாளர்களிடம் அல்லது மின் வாரியத்திடம் இருந்து, மின்சக்திக்கான கட்டணத்திலோ பெற்றுக் கொள்ள வேண்டும்.

 

  • அரசு சார்பில், “பசுமை வீடுகள் ‘திட்டத்தின் கீழ், வீடுகள், சூரிய ஒளி மின் உற்பத்தி அமைப்புகளுடன் உருவாக்கப்படவேண்டும்

 

  • வீட்டு உபயோகத்திற்காக வீடுகளின் மேல், சூரிய சக்தி கூரைகள் அமைக்கும் போது, அவற்றில் இருந்து உற்பத்தியாகும் மின்சாரத்தின் அளவின் அடிப்படையில் ஊக்கத்தொகை அறிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு, முதல் இரண்டு ஆண்டுகள் வரை, யூனிட்டிற்கு, இரண்டு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, ஒரு ரூபாயும், அடுத்த இரண்டாண்டுகளுக்கு, யூனிட்டிற்கு, 50 காசுகளும் ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது

ஏன் இந்தியா மற்றும் தமிழ் நாடு சூரிய மின்சக்தியில் நாட்டம் கொள்கிறது?

 

  • சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கச் சாதகமான 2 பெரிய அம்சங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

 

 

  • முதலாவது, பெரும் நிலப்பரப்பு. இரண்டாவது, வெப்ப மண்டல நாடாக இருப்பதால் ஆண்டின் பெரும்பகுதி இங்கு வெயில் அடிக்கிறது. எனவே ஆண்டுக்கு சுமார் 750 கிகா வாட் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்க முடியும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. 1 கிகா வாட் என்பது 1,000 மெகா வாட்டுகள்.

 

 

  • அதன் மூலம் சுமார் 7 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் அளிக்க முடியும். சூரிய ஒளி மின்சாரத் தயாரிப்பில் இப்போதும் எல்லா மாநிலங்களும் ஆர்வம் காட்டிவிடவில்லை, மத்திய அரசும் திட்டவட்டமான செயல் திட்டத்தை வகுக்கவில்லை. அப்படி யிருந்தும் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், தொழிலகங்கள், வணிக வளாகங்கள், பெரிய மருத்துவ மனைகள், நீதிமன்றங்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், தனியார் கல்வி நிறுவனங்களில் சூரிய ஒளி மின்னுற்பத்தி சாதனங்களைப் பொருத்தத் தொடங்கிவிட்டனர். சூரிய ஒளி மின்னுற்பத்தி இப்போது ஆண்டுக்கு 250% அளவில் அதிகரித்து வருகிறது.

 

  • இந்தியாவில் சூரிய ஆற்றல் துறை ஆண்டின் பெரும்பாலான நாட்களில் விழுகின்ற சூரிய கதிர்வீச்சின் உயரிய அளவையும் நெருக்கமான மக்கள்தொகையையும் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்டுள்ளது. உலகில் உயர்ந்தளவில் நிலக்கரியால் மின்சாரம் பெறும் நாடுகளில் ஒன்றான இந்தியா கரியமில வளி வெளிப்பாட்டைக் குறைக்கும் வண்ணம்புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களை பயன்படுத்துவதில் முனைப்புக் கொண்டுள்ளது.

 

 

  • சூரிய ஆற்றலின் இன்றியமையாமையை அறிந்து 2010-ல் ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய ஒளி மின்னுற்பத்தி திட்டம் 2 மெகா வாட் என்ற அளவில் தொடங்கப்பட்டது. இப்போது 4,200 மெகா வாட்டாக உயர்ந்திருக்கிறது. உலகிலேயே மிகப்பெரிய சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையமும் இந்தியாவில்தான் அமைக் கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் 750 மெகா வாட் திறனுள்ள சூரிய ஒளி மின்திட்டம் நிறுவப்பட்டு வருகிறது.இந்த இலக்கினை அடையவும் தன்முனைவோரை ஊக்குவிக்கவும் நுகர்வுச் செலவினை மின்பிணைப்பு கட்டணத்திற்கு இணையாக்கவும் மானியங்கள் வழங்குகிறது.தமிழ்நாட்டில் 300 நாட்கள் உயர்ந்த சூரிய கதிர்வீச்சு (5.6-6.0 கிவாமணி/ச. மீ) கிடைக்கிறது. குறிப்பாக தென்தமிழ்நாடு சூரிய ஆற்றல் தயாரிப்பிற்கு மிகவும் பொருந்திய நிலப்பகுதியாக விளங்குகிறது

அறிவியல் தகவல்கள்

 

  • சூரிய ஆற்றல் எதற்காக?

 

  • முதல் விசயம் இது என்றைக்குமே தீர்ந்து போகாது.

 

  • நிரந்தர ஆற்றல் மூலமாக நம்பிக்கையுடன் கையாள முடியும்.

 

  • ஒரு முறை அமைப்பதற்கு மட்டுமே செலவாகுமேயன்றி உற்பத்தி செலவு சிறிதும் இல்லை.

 

  • இலவசமாகவே வெப்பமாகவோ. மின்சாரமாகவோ பயன்படுத்திக் கொள்ள முடியும்
    எந்தவித கழிவுகளையும் உருவாக்காத பசுமை ஆற்றல். எனவே சுற்றுச் சூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது,
    இதையெல்லாம் விட முக்கியமான விசயம் சூரிய சக்தி மின்சக்தி தகடுகளின் (Photovoltaic Cells) ஆயுட்காலம் 25 வருடங்களுக்கும் மேல்.

 

  • எனவே இதையெல்லாம் கணக்கில் எடுக்கும் போது உலகின் அடுத்த மிக முக்கியமான ஆற்றல் மூலம் சூரியன்தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. சூரிய ஆற்றலை வேறு ஆற்றலாக மாற்றி சேமித்து வைக்க முடியும், வேண்டும்போது மிக எளிதாக பயன்படுத்திக் கொள்ளவும் முடியும் சூரியனிடமிருந்து கிடைக்கும் ஆற்றலை இரண்டு வழிகளில் வெற்றிகரமாக பயன்படுத்தலாம், ஒன்று மின் ஆற்றலாக மாற்றி இயந்திரங்கள மற்றும் மின் விளக்குகளை இயக்குவது, இரண்டாவது வெப்ப ஆற்றலாக ஹீட்டர். குக்கர் முதலிய உபகரணங்களில் நீரை சூடாக்கி உணவை வேகவைக்க பயன்படுத்துவது, இதில் மின் ஆற்றலாக மாற்றுவதே மிகச் சிறந்த வழி,

சூரியசக்தி தகடுகள் (Solar Photovoltaic Cells)

 

  • இவை சூரிய ஒளி ஆற்றலை மின் ஆற்றலாக மாற்றக் கூடியவை.ஜெர்மன் அறிவியல் அறிஞர் ஐன்ஸ்டினின் ஒளிமின் விளைவு (Photo electric effect) கூற்றுப்படி,” வெற்றிடத்திலுள்ள தூய்மையான உலோக பரப்பின் மீது ஒளிக்கற்றை விழும்போது அதன் புறப் பரப்பிலிருந்து எலெக்ட்ரான்கள் உமிழப்படும் ” என்று கண்டுபிடித்தார். இதுவே சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் அடிப்படை விதி, அதன்படியே இந்த சூரிய ஒளி தகடுகள் செயல்பட்டு மின் உற்பத்தி நடக்கிறது, இதிலும் சில உயர் தொழில் நுட்பங்கள் தற்போது புகுத்தப்பட்டு பல வகைகளில் சூரிய ஒளி தகடுகள் தயாரிக்கப்படுகின்றன,

மொனோ க்ரிஸ்டலின் தகடுகள் (Mono Crystalline Panels)

 

  • சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் ஆரம்ப காலங்களில் மிக பிரபலமானதும். ஓரளவு இயக்குதிறன் கொண்டதும். ஓரளவு எளிய உற்பத்தி முறையாலும் இந்த வகையான சோலார் பேனல்கள் ஒரு காலத்தில் சிறந்து விளங்கின, செமி கண்டக்டர் (Semi Conductor Ex-Silicon) என்று சொல்லப்படும் சிலிகனை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுகிறது. உருவாக்கப்படும் பேனலில் உள்ள செல்களின் எண்ணிக்கையைப் பொருத்து அதன் திறன் மற்றும் வோல்டேஜ் தீர்மானிக்கப்படுகிறது. இவை நேர் (DC) மின்சாரத்தை மட்டுமே வழங்குபவை.

பாலி க்ரிஸ்டலின் தகடுகள் ( Poly Crystalline Panels)

 

  • இதுதான் இன்று எல்லா இடங்களிலும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்ற சோலார் பேனல்கள்.இதுவும் சிலிகனை அடிப்படையாகக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. இவை 3 வாட் முதல் இன்று 245 வாட் வரை ஒரே பேனல்களாக தயாரிக்கப்படுகிறது. இதை ஒரு கிரிட்(GRIT) கொண்டு இணைத்து மிக அதிக பட்ச மின் உற்பத்தியாக 600 மெகாவாட் வரை குஜராத்தில் சாதித்து காட்டி விட்டனர். எனவே சூரிய சக்தியிலிருந்து மின் உற்பத்தி எவ்வளவு வேண்டுமானாலும் இத்தகைய சோலார் பேனல்களைக் கொண்டு உற்பத்தி செய்ய முடியும். இதன் ஆயுட்காலம் 25 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் தைரியமாக முதலீடு செய்து மின் உற்பத்தி செய்ய முடியும். இதை சரியான மின் பகிர்மான வசதிகளை அமைத்து அனைவருக்கும் விநியோகிக்கவும் முடியும், ஒவ்வொரு வீடுகளிலும் தேவைக்கேற்ப சூரிய மின்உற்பத்தி தகடுகளை நிறுவி அவரவர்களே உற்பத்தி செய்து கொண்டால் மின் ஆற்றல் தட்டுப்பாடு என்றுமே வராது.

துனுக்குகள்

 

  • முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் முதல் நாடாளுமன்றம் என்ற பெரு மையை பாகிஸ்தான் நாடாளு மன்றம் பெற்றுள்ளது . இஸ்ரேல் உள்ளிட்ட சில நாடு களின் நாடாளுமன்றங்கள் பகுதி அளவு சூரிய சக்தி மின்சாரத்தில் இயங்குகின்றன.
    உலகிலேயே முழுக்க முழுக்க சூரிய ஒளி மின்சாரத்தைப் பயன்படுத்தும் விமான நிலையமாகியிருக்கிறது கேரளத்தில் உள்ள கொச்சி.

இது தொடர்புடைய கூடுதல் தகவல்கள்

 

  • மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு அங்கமாக சூரிய மின்னுற்பத்திக்காக உள்நாட்டில் தயாரிக்கும் செல்கள் மற்றும் சூரிய பலகைகளை பயன்படுத்த வேண்டும் என்ற அரசு உத்தரவு செல்லாது என்று அறிவிக்குமாறு உலக வர்த்தக அமைப்பிடம் அமெரிக்கா புகார் அளித்தது. அதை விசாரித்த டபிள்யூடிஓ இத்தகைய தடையை சமீபத்தில் விதித்துள்ளது. அமெரிக்கா அளித்த புகாரை ஏற்ற உலக வர்த்தக நிறுவனம், சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான சாதனங்களைப் பயன்படுத்தும் விஷயத்தில் இந்தியத் தயாரிப்புகளுக்கும் வெளிநாட்டுத் தயாரிப்புகளுக்கும் இடையில் வித்தி யாசம் பார்க்கப்படக்கூடாது என்று தீர்ப்பளித்துள்ளது.

 

  • மத்திய அரசின் “பொலிவுறு நகரம்’ திட்டத்தின் 3-ஆவது பட்டியலில் மதுரை, சேலம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 4 தமிழக நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

 

  • 2022-ஆம் ஆண்டுக்குள் 100 பொலிவுறு நகரங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் 20 நகரங்கள் முதல்கட்டமாக அறிவிக்கப்பட்டன. அதில் சென்னை, கோவை ஆகிய தமிழக நகரங்கள் இடம் பெற்றிருந்தன

 

  • 2-ஆவது கட்டமாக கடந்த மே மாதம் 13 நகரங்கள் அடங்கிய 2-ஆவது பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழக நகரம் எதுவும் இடம் பெறவில்லை

 

  • இதுவரை 60 நகரங்கள் பொலிவுறு நகரங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

 

  • பொலிவுறு நகரங்களில் தடையில்லா மின்சாரம், குடிநீர் விநியோகம், இணையதள வசதி, மின்னணு நிர்வாகம் உள்பட சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள் அளிக்கப்படும்.

 

  • நான்கு வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்துள்ளது.காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு 2007-இல் அளிக்கப்பட்டு, அது தொடர்பான அறிவிக்கை 2013-இல் வெளியிடப்பட்டது.

 

  • குறிப்பு இது பற்றி விளக்கமான கட்டுரை ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
    பயங்கரவாதத்தை ஒழிப்பதில் இந்தியாவுக்கு ஆப்கன் துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் அஷ்ரஃப் கனி தெரிவித்தார்.

 

  • ஐ.நா.வின் 71-ஆவது பொது சபைக் கூட்டத்தில் தலைவர்களின் உரை செவ்வாய்க்கிழமை (செப். 20) தொடங்கியது.

 

  • இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான அதிநவீன ரக ஏவுகணையான ‘பாரக் 8 சோதனை, ஒடிஸாவில் செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 20 அன்று வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

 

  • உலகப்பொருளாதார சுதந்திரக் குறியீட்டில் இந்தியா 112 வது இடம் பெற்றுள்ளது.மொத்தம் 159 நாடுகள் இதில் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. 2014 ஆம் ஆண்டு தகவல்களை அடிப்படையாக வைத்து குறியீடுகள் வழங்கப்பட்டுள்ளது.

 

  • இந்தியாவின் கடலோரச் சாலைப் பணிக்கு ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளிக்கிறது. முதன்முதலாக விசாகப்பட்டினம் முதல் சென்னை வரை இத்திட்டம் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.நிலத்தில் இருந்து விண்ணில் பாய்ந்து நெடுந்தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கி அழிக்கும் திட்டமிட்ட இலக்குகளை தாக்கி அழிப்பதுடன், தன்னை தாக்க வரும் பிற பொருட்களையும் மோப்பம் பிடிக்கும் ஆற்றல் கொண்ட இந்த ஏவுகணைகள் எத்தகைய அச்சுறுத்தலையும் எதிர்கொள்ளும் திறன் மிக்கதாகும்.

 

  • இந்தியா – இஸ்ரேல் கூட்டுத் தயாரிப்பில் உருவான எம்ஆர் – சாம் ரக ஏவுகணைகளின் பரிசோதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.

 

  • இந்த வகை ஏவுகணைகளின் செயல்பாடுகள், செல்லும் தடங்கள் உள்ளிட்டவற்றை தரையிலிருந்தபடி கண்காணிக்க முடியும்

 

  • அணு ஆயுதங்களைச் சுமந்தபடி 70 கி.மீ முதல் 90 கி.மீ சுற்றளவில் உள்ள இலக்குகளை எளிதாக தாக்கும் வல்லமை படைத்தது. குறிப்பாக போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், ஏவுகணைகள் ஆகியவற்றையும் இடைமறித்து அழிக்கும் திறன் பெற்றது. இந்த ஏவுகணை 2.7 டன் எடையில், 4.5 மீட்டர் நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது

 

  • குஜராத் மாநிலம் ஆமதாபாதில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கபடி போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

 

  • தேசிய விமானப் போக்குவரத்துக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை தனது ஒப்புதலை வழங்கியது.

 

  • இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தேசிய விமானப் போக்குவரத்து கொள்கைக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஒப்புதல் அளித்துள்ளது. விமானப் போக்குவரத்து துறையில் இந்த கொள்கை, மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம், 2020ஆம் ஆண்டுக்குள் இந்திய விமானப் போக்குவரத்து துறை, உலகிலேயே 3ஆவது பெரிய விமானப் போக்குவரத்து துறையாக மாறும். இந்திய உள்நாட்டு விமானப் போக்குவரத்துத் துறையானது கடந்த ஏப்ரல் மாதத்துடன் தொடர்ந்து 13ஆவது மாதமாக உலகிலேயே வேகமாக வளர்ச்சியடைந்து வரும் விமானப் போக்குவரத்து துறையாக திகழ்கிறது. ஏப்ரல் மாதத்தில் மட்டும், இந்திய விமானப் போக்குவரத்து துறை சுமார் 22 சதவீதம் வளர்ச்சி கண்டது.

 

  • மத்திய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு கடந்த 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தேசிய விமானப் போக்குவரத்து கொள்கையை முதல்முறையாக வெளியிட்டது. அந்தக் கொள்கைக்கு கடந்த நிதியாண்டில் ஒப்புதல் பெறப்பட்டு, ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அக்கொள்கையில் இருக்கும் சில விதிகள் தொடர்பாக கருத்து ஒற்றுமை ஏற்படாததால் மத்திய அரசு பின்வாங்கி விட்டது.

 

  • இந்நிலையில், தேசிய விமானப் போக்குவரத்து கொள்கை தொடர்பான திருத்தப்பட்ட வரைவை மத்திய அரசு கடந்த 2015ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மீண்டும் வெளியிட்டது. அதையடுத்து, இத்துறையில் சம்பந்தப்பட்டிருக்கும் பல்வேறு தரப்பினருடனும் மத்திய அரசு விரிவான பேச்சுவார்த்தை நடத்தி, 8 மாதங்களுக்கு பிறகு அந்தக் கொள்கையை இறுதி செய்தது.

நோக்கம்

 

  • உள்நாட்டு விமானப் போக்குவரத்துக் கொள்கையின் நோக்கம் பாதுகாப்பான குறைந்த செலவிலான மற்றும் பராமரிக்கத் தக்க விமானப் பயணத்தை அளிப்பதுடன் பிராந்திய இணைப்பை விரிவு படுத்தும் நோக்கத்துடன் இந்தியாவின் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் இணைப்பை ஏற்படுத்துவது, எளிதாக வர்த்தகம் செய்வது மற்றும் சரக்குகள், பொது விமானப் போக்குவரத்து, வான்வெளி உற்பத்தி தொடங்கி திறன் மேம்பாடு வரை அனைத்து விமானப் போக்குவரத்து துறை சங்கிலியை மேம்படுத்துவதாகும்.

 

முக்கிய அம்சங்கள்

 

  • ஒரு மணி நேரத்துக்குள் பயண இலக்கை அடையும் குறைந்த தொலைவு விமானங்களில் பயணிகள் கட்டணமாக ரூ.2,500 மட்டுமே விமான நிறுவனங்கள் வசூலிக்க முடியும்.

 

  • சர்ச்சைக்குரிய 5/20 விதி நீக்கப்பட்டுள்ளதால், உள்நாட்டில் குறைந்தது 20 விமானங்களைக் கொண்டிருக்கும் எந்த நிறுவனமும் வெளிநாடுகளுக்கு விமானத்தை இயக்கலாம்.

 

  • விமானப் போக்குவரத்து இல்லாத வழித்தடங்களில் விமானங்களை இயக்கும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்படும். பிற பகுதிகளை விமானப் போக்குவரத்து மூலம் இணைப்பதற்கான நிதிக்காக விமானப் பயணிகளிடம் இருந்து கூடுதலாக சிறிய அளவில் வரி வசூலிக்கப்படும்.

 

  • நாடு முழுவதும் 300 விமான நிலையங்கள் அமைக்க திட்டமிடப் பட்டிருக்கிறது. அதிக சோதனை இல்லாத விமான நிலையங்களாக இது இருக்கும் இந்த விமான நிலையங்களை அமைக்க அனைத்து டிக்கெட்களிலும் 2 சதவீத வரி விதிக்க முடிவு செய்திருக்கிறது. மண்டல இணைப்பு திட்டத்தின் (ஆர்சிஎஸ்) மூலம் இவை கொண்டு வரப்பட இருக்கிறது. தோராயமாக வருடத்துக்கு 1,500 கோடி ரூபாய் இதன் மூலம் வசூலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி பயணிகள் அடர்த்தி குறைவாக உள்ள இடங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டிருக்கிறது.

 

  • இந்த துறையில் அந்நிய நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது
LATESTS GOVERNMENT JOBS