சொல் | sol - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET
Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

சொல்

  • ஒர் எழுத்து தனித்து நின்றோ , பல எழுத்துகள் சேர்ந்து வந்தோ பொருள் தருவது சொல் எனப்படும்
  • வேறுபெயர்கள்– பதம் , மொழி , கிளவி
.கா.கண், மரம்
  • சொல் 4 வகைப்படும்
  1. பெயர்ச்சொல்
  2. வினைச்சொல்
  3. இடைச்சொல்
  4. உரிச்சொல்

 

  1. பெயர்ச்சொல்
  • பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் ஆகும்
  • .பொருள் , இடம் , காலம் , சினை (உறுப்பு), குணம் (பண்பு) , தொழில்என்ற ஆறில் எதாவது ஒன்றை உணர்த்தும் வகையில் இருக்கும் .
  • இந்த ஆறும் , பொருளாது ஆறு (அ) பொருள் முதலாறு என்றும் அழைப்பர் .

 

 

வகைகள் .கா
பொருட்பெயர் மனிதன் , பசு , மயில் , புத்தகம்
இடப்பெயர் சேலம் , ஈரோடு ,நாமக்கல் ,
காலப்பெயர் மணி, நாள் , மாதம் , வருடம்
சினைப்பெயர் கை ,கால் , மூக்கு , கண்
பண்புபெயர் நீளம் , இனிமை ,வெண்மை, வட்டம்
தொழிற்பெயர் படித்தல் , எழுதல் , உண்ணல்

 

  • ஒன்றன் பெயரை உணர்த்தும் சொல் பெயர்ச்சொல் ஆகும்.
.கா.தாமரை
  1. வினைச்சொல்
  • ஒரு பொருளின் வினை (செயல்)யை உணர்த்தும் சொல் .முடிவு பெற்ற வினைச்சொல் , முற்று எனவும் ; முடிவு பெறாத வினைச்சொல் எச்சம் என்றும் வழங்கப்படும் .
  • முற்று இரண்டு வகைப்படும் = தெரிநிலை வினைமுற்று , 2, குறிப்பு வினைமுற்று
  • எச்சம் இரண்டு வகைப்படும் = பெயரெச்சம் , 2. வினையெச்சம்
  • முற்று வினையாவது தெரிநிலை வினைமுற்று குறிப்பு வினைமுற்று என இருவகைப்படும்.

 

முற்று

  • ஒரு பொருள் செய்த தொழிலை குறித்துவந்த, முற்று பெற்ற சொல் .
  • திணை , பால் , எண் , இடம் , ஆகியவற்றுடன் காலத்தையும் காட்டும் .
  • பெயர்ச்சொல்லுக்கு துணை நின்று , வாக்கியத்தின் பொருளை முடித்துக்காட்டுவது வினைமுற்று .
.கா.புலவர் பாடினார் .
  • மேலே உள்ள வாக்கியத்தில் , புலவர் என்பது பெயர்ச்சொல் என்று அறிவீர்கள் . அதை முடிவு செய்யும் பொருட்டு ‘பாடினார்’ என்ற வினைச்சொல் வருகிறது.

 

முற்று இரண்டு வகைப்படும்

  1. தெரிநிலை வினைமுற்று
  2. குறிப்பு வினைமுற்று.

 

தெரிநிலை வினைமுற்று

  • செய்பவன் , கருவி , நிலம் , செயல் , காலம் , செய்பொருள் என ஆறையும் உணர்த்துவது , தெரிநிலை வினைமுற்றாகும் .
  • மேலே உள்ளவற்றில் , சில குறைந்து வந்தாலும் , காலம் மட்டும் தெளிவாக காட்டப்படும் .
.கா.  எழிலரசி மாலை தொடுத்தாள் .

இதில் ,

செய்பவன் எழிலரசி
கருவி நார் , பூ ,கை
நிலம் அவளின் இருப்பிடம்
செயல் தொடுத்தல்
காலம் இறந்த காலம்
செயபொருள் மாலை

 

  • இதில் கருவி என்பது நார் , பூ , கை என்பது மறைந்து வந்துள்ளது . அவளின் இருப்பிடமும் உணர்த்தப்படவில்லை . ஆனால் , வேலை நடந்த காலம் , இறந்த காலம் என்று தெளிவாக தெரிகிறது .
  • இவ்வாறு செய்பவன், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் என்னும் ஆறையும் உணர்த்துவது தெரிநிலை வினைமுற்றாகும்.
  • இவற்றுள் சில குறைந்தும் வரும். ஆனால் காலத்தைத் தெளிவாகக் காட்டும்.
Click Here To Get More Details