சமூக, சமய சீர்திருத்தங்கள் | tnpsc study materials

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

maanavan

பிரம்ம சமாஜம்:

 • 1815 ம் ஆண்டு கல்கத்தாவில் ராஜாராம் மோகன் ராய் ஆத்மிய சபையை நிறுவினார். அதுவே ஆகஸ்ட் 20, 1828 ல் பிரம்ம சபாவாக வளர்ச்சியடைந்தது. பின்னர் பிரம்ம சமாஜம் என அழைக்கப்படுகிறது.
 • பிரம்ம சமாஜம் என்றால் இறைவன் சபை என்று பொருள்.
 • 1829 ம் ஆண்டு பெண்டிங் பிரபு சதிமுறையை சட்ட விரோதம் என அறிவித்தார். அதற்கு உறுதுணையாக இவர் இருந்தார். முகலாய அரசர் “இரண்டாம் அக்பர் இவருக்கு ராஜா” என்ற பட்டத்தை வழங்கினார்.
 • சதி முறைக்கு எதிராக 1819 ல் வங்காள மொழியில் “சம்வாத் கௌமுதி” என்ற வார இதழை துவங்கினார்.
 • உருவ வழிபாடு,மூடப்பழக்க வழக்கங்கள், உடன்கட்டை ஏறுதல், சாதிமுறை, குழந்தை திருமணம், பெண் சிசுக் கொலை ஆகியவற்றை பிரம்ம சமாஜம் எதிர்க்கிறது.
 • பெண் விடுதலை, பெண்கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை ஆகியவற்றை ஆதரித்தது.
 • புதிய உலகின் விடிவெள்ளி, புதிய இந்தியாவின் தூதன், நவீன இந்தியத் தந்தை, இந்தியாவின் விடிவெள்ளி, இந்து மறுமலர்ச்சியின் தந்தை, நவீன இந்தியாவின் முன்னோடி, இந்தியாவில் சமூக சீர்திருத்த முன்னோடி – என இராஜா ராம்மோகன் ராய் போற்றப்படுகிறார்.
 • கி.பி. 1875 – பினாவாட்ஸ்கி, ஆல்காட் என்பவரால் நியூயார்க்கில் தொடங்கப்பட்டது
 • கி.பி. 1882 – சென்னைக்கு தலைமையகம் மாற்றப்பட்டது
 • கி.பி. 1890 – அன்னிபெசன்ட் அம்மையார் பனாரஸ் இந்து கல்லூரியை நிறுவினார்
 • கி.பி. 1916 – தன்னாட்சி இயக்கத்தை அன்னிபெசன்ட் சென்னையில் தொடங்கினார்

ஆரிய சமாஜம்:

 • 1875 ம் ஆண்டு பம்பாயில் தயானந்த சரஸ்வதி ஆரிய சமாஜத்தை நிறுவினார்.
 • இவருடைய இயற்பெயர் – மூலசங்கர். குரு – சுவாதி விரஜானந்தா
 • தலைமையகம் – லாகூர். “சுவராஜ்” என்ற சொல்லை முதலில் பயன்படுத்தினார்.
 1. “வேதங்களை நோக்கிச் செல்”,
 2. “இந்தியா இந்தியர்களுக்கே” என்று முழக்கமிட்டார்.
 • சத்தியார்த்த பிரகாஷ் என்ற நூலை எழுதினார்
 • “சுத்தி இயக்கத்தை” துவங்கினார். இந்துக்கள் அல்லாதோர் அல்லது வேறுமதத்திற்கு மாறிய இந்துக்களை மீண்டும் இந்து சமயத்திற்கு மதம் மாற்றுதல்.
 • இந்து சமயத்தின் மார்டின் லூதர் கிங் – என அழைக்கப்பட்டார்.
 • 1886 ம் ஆண்டு லாகூரில் தேவ் பள்ளியினை (Dayanand Anglo – Vedic) லாலா ஹன்ஸ் ராஜ் திறந்தார்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]