சிந்து, சாக்ஷி, தீபா உள்ளிட்ட நால்வருக்கு கேல் ரத்னா விருது

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

 

 

 

  • கேல் ரத்னா விருதுடன் பட்டயம் மற்றும் ரூ.7.5 லட்சம் ரொக்கப் பரிசும், அர்ஜுனா, துரோணாச்சார்யா, தியான் சந்த் விருதுகளை பெறுபவர்களுக்கு சான்றிதழுடன் ரூ.5 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படும்.

 

  • வரும் 29-ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, விருதுகளை வழங்குகிறார்.

 

கேல் ரத்னா விருது:

 

  • பி.வி.சிந்து (பாட்மிண்டன்), சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்), தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்ஸ்), ஜிது ராய் (துப்பாக்கிச் சுடுதல்).

 

  • துரோணாசார்யா விருது: நாகபுரி ரமேஷ் (தடகளம்), சாகர் மால் தயாள் (குத்துச்சண்டை), ராஜ்குமார் சர்மா (கிரிக்கெட்), விஸ்வேஷ்வர் நந்தி (ஜிம்னாஸ்டிக்ஸ்), பிரதீப் குமார் (நீச்சல்), மகாவீர் சிங் (மல்யுத்தம்).

 

அர்ஜுனா விருது:

 

  • ரஜத் செளகான் (வில்வித்தை), லலிதா பாபர் (தடகளம்), செளரவ் கோத்தாரி (பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்நூக்கர்), சிவ தாபா (குத்துச்சண்டை), அஜிங்க்ய ரஹானே (கிரிக்கெட்), சுப்ரதா பால் (கால்பந்து), ராணி ராம்பால் (ஹாக்கி), ரகுநாத் (ஹாக்கி), குருபிரீத் சிங் (துப்பாக்கிச் சுடுதல்), அபூர்வி சண்டீலா (துப்பாக்கிச் சுடுதல்), செளம்யஜித் கோஷ் (டேபிள் டென்னிஸ்), வினேஷ் போகத் (மல்யுத்தம்), அமித் குமார் (மல்யுத்தம்), சந்தீப் சிங் மான் (பாரா தடகளம்), வீரேந்திர சிங் (மாற்றுத்திறனாளி மல்யுத்தம்).

 

தியான் சந்த் விருது:

 

  • சேத்தி கீதா (தடகளம்), சில்வனாஸ் டங் டங் (ஹாக்கி), ராஜேந்திர பிரால்ஹத் (படகுப் போட்டி).