எஸ்.ஐ., தேர்வில் ஜெயிக்கும் வழி

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for POLICE EXAM

 

 • தமிழக போலீசில் 1078 எஸ்.ஐ., பணியிடங்களுக்கு மே 23, 24ல் தேர்வுகள் நடக்கின்றன. இதில் பங்கேற்பவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் தினமலர் நாளிதழ் சார்பில் பசுமலை மன்னர் கல்லுாரியில் நடந்தது.இதில், ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங்’ நிர்வாக இயக்குனர் வெங்கடாசலம் பேசியதாவது:இத்தேர்வு பொதுப் பிரிவு மற்றும் போலீஸ் துறையினருக்கான ஒதுக்கீடு பிரிவுகளில் நடக்கிறது. பொதுப் பிரிவில் 100 மதிப்பெண்ணில், 70 மதிப்பெண் எழுத்துத் தேர்வுக்கும், 30 மதிப்பெண் நேர்முகம், சிறப்பு மற்றும் உடற்தகுதி தேர்வுக்கு ஒதுக்கப்படும். போலீஸ் பிரிவினருக்கு 85 மதிப்பெண்ணிற்கு எழுத்து தேர்வு நடக்கும்.
 • உடல் தகுதியை விட எழுத்துத் தேர்வில் எடுக்கும் ஒவ்வொரு கூடுதல் மதிப்பெண்ணும் வெற்றியை உறுதி செய்யும். எழுத்து தேர்வில் பொது அறிவு பகுதிக்கு 40 மதிப்பெண், உளவியல் பகுதிக்கு 30 மதிப்பெண் வினாக்கள் இடம் பெறும்.
 • பொது அறிவு பகுதியில் அறிவியல், இந்திய அரசியல் அமைப்பு, இந்திய பொருளாதாரம், வரலாறு, தமிழ் இலக்கியம் மற்றும் தமிழ் கலாசாரம், உலக மற்றும் இந்திய புவியியல், நடப்பு நிகழ்வுகள் குறித்த வினாக்கள் இடம் பெறும். இதற்கு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு பாடப் புத்தங்களை தெளிவாக படித்தால் போதும்.
 • சமீபத்திய நாட்டு நடப்புகள், மாநிலம் தலைநகர், சர்வதேச அமைப்புகள் பெயர், விளையாட்டு செய்திகளையும் தெரிந்து கொள்ள வேண்டும்.
 • உளவியலில், நுணுக்கமாக பதில் அளிக்கும் வகையில் வினா அமைந்திருக்கும். சங்கேத குறியீடு, எண் தொடர், விடுபட்ட எண்ணை எழுதுதல்,
 • ஆங்கில எழுத்தை வரிசைப்படுத்துதல், ரத்த உறவுகள், சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு எடுத்தல், திறனறிவு, கணக்குப் புதிர், கணிதம் குறித்த வினாக்கள் இடம் பெறும்.
 • புத்தகத்தில் உள்ளதை அப்படியே படிக்காமல், எளிதில் படிப்பதற்கு ஏற்ப குறிப்பெடுக்க வேண்டும். அறிவியல் பகுதிகளை மறைமுக கேள்விகள் இடம் பெறும். எனவே ஒரு பாடம் என்றால் அதுபற்றி முழுமையாக படிக்கும் முறையை பின்பற்ற வேண்டும்.
 • அதிக பாடங்களை படிப்பதை விட, தேர்வு செய்த பாடங்களை முழுமையாக படிக்க வேண்டும். குறுகிய காலத்தில் திட்டமிட்டு பதட்டமின்றி தயாராக வேண்டும். குழு ஏற்படுத்தி, ஒவ்வொரு நாளும் ஒரு தலைப்பில் விவாதிக்கலாம்.
 • எளிதான வினாக்களை அனைவரும் எழுதிவிடுவர். அதன் மூலம் கிடைக்கும் மதிப்பெண் பயன்தராது. கடின
 • வினாவிற்கு பதில் அளிப்பது மூலம் வெற்றி சாத்தியமாகும் என்றார்.
 • தெளிவு கிடைத்தது
 • இப்பயிற்சி முகாமில் பங்கேற்றோர் கூறியதாவது: முனியராஜ், மதுரை: எஸ்.ஐ., தேர்வு மட்டுமல்ல போட்டி தேர்வுகளுக்கும் எப்படி படிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. வரலாறு பாடத்தை எளிதாக படிக்கும் வழி கிடைத்தது.
 • ஈஸ்வரி, மதுரை : படித்ததை எவ்வாறு நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என புரிந்தது. கணித வினாக்களுக்கு குறிப்பிட்ட நேரத்திற்குள் விடை அளிப்பது என்பது புதுவிஷயமாக இருந்தது.
 • அபி காயல், மதுரை: ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை புத்தகங்களை படிக்க வேண்டும் என்ற தெளிவு கிடைத்தது. ‘கஷ்டம்’ என நினைக்கும் பகுதியை கூட எளிதில் படிக்கும் முறை தெரிந்தது. அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் பயனுள்ளதாக இப்பயிற்சி அமைந்தது.
 • வினோத்குமார், நிலக்கோட்டை: பாடவாரியாக படிக்காமல் ஒரு தலைப்பை தேர்வு செய்து அதை முழுமையாக படிக்க வேண்டும் என்பது புதுமையாக இருந்தது.

[qodef_button size=”medium” type=”” text=”LATESTS GOVERNMENT JOBS” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://www.maanavan.info/” target=”_blank” color=”#094237″ hover_color=”” background_color=”#9E9FF2″ hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]