SI அலகு முறை | tnpsc study materials

maanavan physics

  • பல அலகு முறைகள் இருப்பதால் ஏற்படும் குழப்பத்தைத் தீர்க்க உலகில் உள்ள எல்லா அறிஞர்களாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய, பன்னாட்டு அலகுமுறை 1960 ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது. இதனை SI அலகு முறை என்பர்.
  • ஒரு குறிப்பிட்ட அளவை அளத்தல் என்பது அதன் மதிப்பை நிலையான மற்றொரு மதிப்போடு ஒப்பிட்டுக் கூறுவதேயாகும் என்பதை நாம் அறிவோம். இந்த நிலையான அளவு அலகு எனப்படும்.
  • 1971 ஆம் ஆண்டில் எடைகள் மற்றும் அளவுகள் பற்றிய பொதுக் கூட்டமைப்பு கூடியது. இதில் அனைவரும் ஒரே சீராகப் பயன்படுத்தத்தக்க அலகு முறையாக SI அலகு முறை அறிவிக்கப்பட்டது.
  • SI அலகு முறையில் பல்வேறு அளவுகளுக்காக அலகுகள் நிலையாக வரையறுக்கப்பட்டுள்ளன. மேலும், இம்முறை மற்ற அலகு முறைகளை விடச் சிறப்பானதாகும்.
  • இது அணுப் பண்புகளின் அடிப்படையில் அமைந்தது. எனவே, காலத்தைப் பொருத்து மாறாதது. மேலும், இது பயன்படுத்துவதற்கு மிக எளியது.
  • SI அலகு முறை 7 அடிப்படை அளவுகளையும், 22 வழி அளவுகளையும் உள்ளடக்கியது.

அடிப்படை அளவுகள்

  • நீளம், நிறை, காலம் போன்ற அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம். ஏனெனில் இவற்றை வேறு எந்த அளவுகளைக் கொண்டும் பெற இயலாது.
  • அடிப்படை அளவுகளை அளக்கப் பயன்படுத்தப்படும் அலகுகள் அடிப்படை அலகுகள் எனப்படும்.

திட்ட அலகுகள்

  • திட்ட அளவீட்டில் பயன்படுத்தப்படும் அலகுகள் திட்ட அலகுகள் எனப்படும்.
  • முழம், சாண் போன்றவை திட்ட அலகுகள் ஆகாது.
  • மீட்டர், கிலோ கிராம், வினாடி போன்றவை திட்ட அலகுகளாகும்.

மின்னோட்டம் (Current)

  • ஆம்பியர் என்பது SI அலகு முறையில் மின்னோட்டத்திற்கான அலகாகும்.

பொருளின் அளவு

  • SI அலகு முறையில் பொருளின் அளவு மோல் (mol) என்ற அலகால் அளக்கப்படுகிறது.

ஒளியின் அளவு

  • SI முறையில் ஒளியின் செறிவை அளக்கப்பயன்படும் அலகு கேண்டிலா ஆகும்.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.