சீறாப்புராணம்

maanavan

  • நபிகள் நாயகத்தின் வாழ்க்கை வரலாற்றையும் போதனையையும் கூறுகிறது. செய்யது காதர் மரைக்காயர் என்பவரே செத்தும் கொடுத்த சீதக்காதி எனப் புகழப்படும் வள்ளலாவார்.
  • அவருடைய துாண்டுகோலாலும் உதவியாலுமே சீறா பாடத் தொடங்கப்பட்டது. அந்நுால் முடியுமுன் அவர் இறந்துவிட்டார்.
  • படிக்காசுப் புலவரால் இச் சீதக்காதிவள்ளல் பாராட்டப்பட்டவர்.
  • சீறாப்புராணம் மூன்று காண்டங்களையும் தொண்ணுாற்றிரண்டு படலங்களையும் கொண்டது.
  • அரபுச் சொற்கள் இதில் மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
  • இசுலாமிய சமய உண்மைகளும், நம்பிக்கைகளும் பற்றிய விரிவான நுாலாயினும், சமரச நோக்கும் இதில் விளங்குவதை, இதன் கடவுள் வாழ்த்துப் பாடலினால் அறியலாம்.

திருவினும் திருவாய்ப் பொருளினும் பொருளாய்த்

              தெளிவினும் தெளிவாய்ச் சிறந்த

       மருவினும் மருவாய் அணுவினுக்கு அணுவாய்

              மதித்திடாப் பேரொளி அனைத்தும்

       பொருளினும் பொருவா வடிவினும் வடிவாய்ப்

              புதலத் துறைந்தபல் லுயிரின்

       கருவினும் கருவாய்ப் பெருந்தவம் புரிந்த

              கருத்தனைப் பொருத்துதல் கருத்தே

  • கம்பரும் தேவரும் தத்தம் காப்பியத்தில், தாம் எடுத்துக் கொண்டவை வேற்று நாட்டுக் கதைகளேயாயினும், அவற்றில் தமிழ்நாட்டுச் சாயலையும் தமிழ் மக்கள் சாயலினையும் கண்டு பாடினர்.
  • அதே மரபு வழியையே நாம் உமறுவிடமும் வீரமாமுனிவரிடமும் காண்கிறோம்.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.