சங்க காலம்

tamil-grammar

 

சங்க காலம்

  • கி.மு. 500 முதல் கி.பி. 200 வரை உள்ள காலகட்டத்தை சங்க காலம் என்பர். இக்காலத்தில் தோன்றிய இலக்கியங்களை சங்க இலக்கியங்கள் என்று குறிப்பிடுவர்.
  • அகத்தியம், தொல்காப்பியம், பத்துப் பாட்டு, எட்டுத் தொகை ஆகிய நூல்கள் தோன்றிய காலத்தை சங்ககாலம் என்று குறிப்பிடுவர்.
  • காதலும் வீரமும் இக்காலத்திய பாடுபொருள்களாக இருந்தன. மேலும் சேர, சோழ பாண்டியர்கள் தமிழகத்தை வீரத்துடன் ஆண்டனர்.
  • சங்கம் வைத்துப் பாண்டிய மன்னர்கள் தமிழ்மொழியை வளர்த்தனர். இச்சங்க இலக்கியங்கள் ஆசிரியப்பா, கலிப்பா, பரிபாடல் ஆகிய பாவகைகளால் அமைந்திருப்பது நோக்கத்தக்கது.

சங்கம் மருவிய காலம்

  • இக்காலம் கி.பி.100 முதல் கி.பி.500 வரையான காலகட்டமாகும். சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய காலம் சங்கம் மருவிய காலம் ஆகும்.
  • இக்கால கட்டத்தில் நீதி இலக்கியங்கள் தோன்றின.
  • இந்நீதி இலக்கியங்கள் பெரும்பான்மையும் வெண்பா யாப்பில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • இக்காலகட்டத்தில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காப்பியங்களும், முத்தொள்ளாயிரம் என்ற நூலும் தோன்றின. இந்தச் சங்க இலக்கியங்களையும், சங்கம் மருவியகால இலக்கியங்களையும் சேர்த்து செம்மொழி இலக்கியங்கள் என்று வழங்கப்படுகின்றன.

 

Click Here To Get More Details

 

No Comments

Sorry, the comment form is closed at this time.