ரியோ ஒலிம்பிக் : தீபத்தை ஏற்றினார் பிரேசில் மாரத்தான் வீரர் வாண்டர் லீ லீமா - MaanavaN | TNPSC Study Materials | Online Test | 2017 | Group 2A | VAO | TET

ரியோ ஒலிம்பிக் : தீபத்தை ஏற்றினார் பிரேசில் மாரத்தான் வீரர் வாண்டர் லீ லீமா

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

400x400_MIMAGE9348d1172c83d8e0486914a9bbcaa7d6

 

  • ரியோ: ரியோ ஒலிம்பிக் போட்டி தொடக்க விழா நடைபெறும் மரக்கானா மைதானத்தில் ரியோ ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது. மாரத்தான் வீரர் வாண்டர் லீ லீமா ஒலிம்பிக் தீபத்தை ஏற்றினர். முன்னதாக பாரம்பரிய முறைப்படி ரியோ ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

 

  • பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மரக்கானா மைதானத்தில் 31வது ஒலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கியது. 207 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் போட்டி தொடக்க விழாவையொட்டி மரக்கானா மைதானத்தில் பிரேசில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது.

 

  • ஒலிம்பிக் போட்டியை முன்னிட்டு கடந்த ஏப்ரல் மாதம் ஒலிம்பிக் போட்டிகளின் பிறப்பிடமான கிரீஸ் நாட்டில் இருந்து, ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டு, பிரேசில் கொண்டுவரப்பட்டது. அதன்பின், பல்வேறு விளையாட்டு வீரர்களால், தொடர் ஓட்டம் மூலமாக பிரேசில் முழுவதும் ஒலிம்பிக் சுடர், சுற்றி எடுத்துவரப்பட்டு, இறுதியாக, நேற்று மைதானத்திற்கு வந்துசேர்ந்தது.

 

வீரர்கள் அணிவகுப்பு

 

400x400_MIMAGE5266ac232dc792203cf9384a7f71ec9f

 

  • அணிவகுப்பு நிகழ்ச்சியின் போது ஆப்கன் வீரர், வீராங்கனைகள் தேசியக் கொடியை ஏந்திய வண்ணம் வந்தபோது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வீரர்கள் அபினவ் பிந்த்ரா தலைமையில் அணிவகுத்து சென்றனர். 118 இந்திய வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளனர். பின்னர் மரக்கானா மைதானத்தில் ரியோ ஒலிம்பிக் கொடி ஏற்றப்பட்டது.

 

ஒலிம்பிக் தீபம்

 

400x400_MIMAGEbbc9a76f556f7fadca989b3634d6df15

 

  • தொடர் ஓட்டம் மூலமாக, ரியோ டி ஜெனிரோ கொண்டு வரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தை பிரேசில் நாட்டைச் சேர்ந்த மாரத்தான் வீரர் வாண்டர் லீ லாமா ஏற்றிவைத்தார். இவர் 2004 ஏதென்ஸ் ஒலிம்பிக் மாரத்தான் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 அணையாத தீபம்

 

400x400_MIMAGE9348d1172c83d8e0486914a9bbcaa7d6

 

  • தீபம் ஏற்றப்பட்டதன் மூலம் ஒலிம்பிக் போட்டிகள் முறைப்படி, தொடங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. போட்டி முடியும் 21ம் தேதி வரை, ஒலிம்பிக் தீபம் தொடர்ந்து எரிந்தபடி இருக்கும். இன்று தொடங்கி, வரும் 21ம் தேதி வரை பல்வேறு பிரிவுகளின்கீழ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.