ரியோ ஒலிம்பிக்: இந்தியாவிலிருந்து 118 பேர்

Deal Score0

india

 

  • ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் 118 பேர் கொண்ட அணி களமிறங்குகிறது.

 

  • ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் மிகப்பெரிய அணியும் இதுதான்.

 

  • 18 விளையாட்டுகளில் இந்தியா பங்கேற்கிறது. அதன் விவரம்:

 

வில்வித்தை

 

  • அதானு தாஸ் (ஆடவர் தனிநபர் ரீகர்வ் பிரிவு), தீபிகா குமாரி, லட்சுமி ராணி, பம்பேலா தேவி (மூவரும் ரீகர்வ் தனிநபர் மற்றும் அணி பிரிவு).

 

குத்துச்சண்டை

 

  • ஆடவர் பிரிவு: சிவ தாபா (56 கிலோ எடைப் பிரிவு), மனோஜ் குமார் (64 கிலோ), விகாஸ் கிரிஷன் (75 கிலோ).

 

கோல்ஃப்

 

  • அனிருபன் லாஹிரி, சிவசங்கர் பிரசாத் (இருவரும் ஆடவர் பிரிவு), அதிதி அசோக் (மகளிர் பிரிவு).

 

பாட்மிண்டன்

 

  • ஆடவர் பிரிவு: ஸ்ரீகாந்த் (ஒற்றையர் பிரிவு), மானு அத்ரி-சுமீத் ரெட்டி (இரட்டையர் பிரிவு).

 

  • மகளிர் பிரிவு: சாய்னா, சிந்து (இருவரும் ஒற்றையர் பிரிவு), ஜுவாலா கட்டா-அஸ்வினி (இரட்டையர் பிரிவு).

 

தடகளம்

 

  • ஆடவர் பிரிவு: முகமது அனாஸ் (400 மீ. ஓட்டம், 4 ல 400 மீ. தொடர் ஓட்டம்), ஜின்சன் ஜான்சன் (800 மீ. ஓட்டம்), அங்கித் சர்மா (நீளம் தாண்டுதல்), ரஞ்சித் மகேஸ்வரி (மும்முறைத் தாண்டுதல்), விகாஸ் கெளடா (வட்டு எறிதல்), நிதேந்திர சிங் ராவத், கோபி தொனாகல், கேதா ராம் (மூவரும் மாரத்தான்),

 

  • குருமீத் சிங், கணபதி (இருவரும் 20 கி.மீ. நடைப் போட்டி), மணீஷ் சிங் (20 கிமீ. மற்றும் 50 கி.மீ. நடைப் போட்டி), சந்தீப் குமார் (50 கி.மீ. நடைப் போட்டி), ஆரோக்கிய ராஜீவ், குன்கு முகமது, தருண் அய்யாசாமி, மோகன் குமார் ராஜா, லலித் மாத்தூர் (5 பேரும் 4ல400 மீ. தொடர் ஓட்டம்).

 

  • மகளிர் பிரிவு: டூட்டீ சந்த் (100 மீ. ஓட்டம்), ஸ்ரபானி நந்தா (200மீ. ஓட்டம்), நிர்மலா (400 மீ. ஓட்டம், 4ல400 மீ. தொடர் ஓட்டம்), தின்டு லூக்கா (800 மீ. ஓட்டம்), சுதா சிங் (3000 மீ. ஸ்டீபிள்சேஸ்), லலிதா பாபர் 3000 மீ. ஸ்டீபிள்சேஸ்), மன்பிரீத் கெளர் (குண்டு எறிதல்), சீமா பூனியா (வட்டு எறிதல்), ஓ.பி.ஜெய்ஷா, கவிதா ரெளத் (இருவரும் மாரத்தான்), குஷ்பிர் கெளர், சப்னா பூனியா (20 கி.மீ. நடைப் போட்டி), பூவம்மா, அனில்டா தாமஸ், ஜிஸ்னா மேத்யூ, அஸ்வினி அகுஞ்ஜி, தேவஸ்ரீ மஜும்தார் (5 பேரும் 4ல400 மீ. தொடர் ஓட்டம்).

 

டேபிள் டென்னிஸ்

 

  • அஜந்தா சரத் கமல், செளம்யஜித் கோஷ் (ஆடவர் ஒற்றையர் பிரிவு), மெளமா தாஸ், மணிகா பத்ரா (மகளிர் ஒற்றையர் பிரிவு)

 

டென்னிஸ்

 

  • பயஸ்-போபண்ணா (ஆடவர் இரட்டையர் பிரிவு), சானியா-பிரார்த்தனா (மகளிர் இரட்டையர் பிரிவு), போபண்ணா-சானியா (கலப்பு இரட்டையர் பிரிவு).

 

பளுதூக்குதல்

 

  • சதீஷ் குமார் (ஆடவர் 77 கிலோ) மீராபாய் சானு (மகளிர் 48 கிலோ)

 

  • ஜூடோ அவதார் சிங் (ஆடவர் 90 கிலோ)

 

  • ஜிம்னாஸ்டிக்ஸ் தீபா கர்மாகர் (மகளிர் தனிநபர் ஆர்டிஸ்டிக்)

 

துடுப்பு படகு

 

  • போகனால் பாபன் (ஆடவர் ஒற்றை துடுப்பு)

 

நீச்சல்

 

  • சாஜன் பிரகாஷ் (ஆடவர் 200 மீ. பட்டர்ஃபிளை), ஷிவானி கட்டாரியா (மகளிர் 200 மீ. பட்டர்ஃபிளை).

 

துப்பாக்கிச் சுடுதல்

 

  • ஆடவர் பிரிவு: அபிநவ் பிந்த்ரா (10 மீ. ஏர் ரைபிள்), பிரகாஷ் நஞ்சப்பா (50 மீ. பிஸ்டல்), ககன் நரங்

 

  • (10 மீ. ஏர் ரைபிள், 50 மீ. ரைபிள் புரோன், 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ்), ஜிது ராய் (10 மீ. ஏர் பிஸ்டல், 50 மீ. பிஸ்டல்), செயின் சிங் (50 மீ. ரைபிள் புரோன், 50 மீ. ரைபிள் 3 பொசிஷன்ஸ்), குருபிரீத் சிங் (10 மீ. ஏர் பிஸ்டல், 25 மீ. ரேபிட் ஃபயர் பிஸ்டல்), மானவ்ஜித் சிங், கினான் செனாய் (டிராப்), மைராஜ் அஹமதுகான் (ஸ்கீட்).

 

  • மகளிர் பிரிவு: அபூர்வி சண்டீலா, அயோனிகா பால் (10 மீ. ஏர் ரைபிள்), ஹீனா சித்து (10 மீ. ஏர் பிஸ்டல், 25 மீ. பிஸ்டல்).

 

மல்யுத்தம்

 

  • ஆடவர் ஃப்ரீஸ்டைல்: யோகேஷ்வர் தத் (65 கிலோ),

 

  • நர்சிங் யாதவ் (74 கிலோ),

 

  • சந்தீப் தோமர் (57 கிலோ).

 

  • ஆடவர் கிரேக்கோ ரோமன்: ரவீந்திர கேத்ரி (85 கிலோ), ஹர்தீப் சிங் (98 கிலோ).

 

  • மகளிர் ஃப்ரீஸ்டைல்: வினேஷ் போகத் (48 கிலோ), பபிதா குமாரி (53 கிலோ), சாக்ஷி மாலிக் (58 கிலோ).

 

இந்தியா இதுவரை…

 

  • 1900-ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்று வரும் இந்தியா, கடந்த 116 ஆண்டுகளில் 26 பதக்கங்களை மட்டுமே வென்றுள்ளது.

 

  • 2012-இல் லண்டனில் நடைபெற்ற முந்தைய ஒலிம்பிக்கில் இந்தியா 6 பதக்கங்களை வென்றது. இதுதான் ஒரு ஒலிம்பிக்கில் இந்திய அணி வென்ற அதிகபட்ச பதக்கம். லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் சுஷீல் குமார், துப்பாக்கிச் சுடுதல் வீரர் விஜய் குமார் ஆகியோர் வெள்ளிப் பதக்கம் வென்றனர். பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், துப்பாக்கிச் சுடுதல் வீரர் ககன் நரங் ஆகியோர் வெண்கலம் வென்றது குறிப்பிடத்தக்கது. இந்தியா 1904, 1908, 1912 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவில்லை. 1916, 1940, 1944 ஆகிய ஆண்டுகளில் உலகப் போர் காரணமாக ஒலிம்பிக் போட்டி நடைபெறவில்லை.

 

  • தொடக்க விழா காலை: 4.30