ரியோ ஒலிம்பிக்: அரையிறுதியில் இந்தியாவின் பதக்க நம்பிக்கை பி.வி.சிந்து!

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

 

 

  • ரியோ டி ஜெனீரோ: ரியோ ஒலிம்பிக் பேட்மிட்டனில், உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சீன வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

 

  • பதக்க கனவுகள் இந்தியாவை விட்டு விலகும் நேரத்தில், ஒளிக்கீற்றாய் தெரிக்கிறார் பி.வி.சிந்து. காலிறுதியில் இந்தியாவின் பி.வி.சிந்து, பேட்மிட்டன் போட்டிகளில் உலகின் நம்பர் 2 சாம்பியனான வாங் யிஹானியை எதிர் கொண்டார். பரபரப்பான ஆட்டத்தில் சீனா வீராங்கனையை 22-20, 21-19 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

  • பத்தாவது ரேக்கிங்கில் இருக்கும் சிந்து, இந்த வெற்றிக்காக கடுமையாக போராடினார். முதல் செட்டில் 14-14 புள்ளிகள் வரை சரிசமமாக ஆட்டம் சென்று கொண்டு இருந்தது. பின்னர் 20-17,20-20 என சென்றாலும், 22-20 என்ற கணக்கில் அதில் வென்றார் சிந்து.

 

  • அதேபோல், இரண்டாவது செட்டிலும், தனது ஆதிக்கத்தை தொடர்ந்து நிலை நாட்டிய சிந்து, 8-3,11-8,13-13,18-13,19-18 என அதிரடியில் இறங்கினார். இறுதியில் 22-20, 21-19 என்ற கணக்கில் கடுமையாக போராடி வாங் யிஹானியை வென்றார்.

 

  • பேட்மிட்டன் போட்டிகளில் அரையிறுதுக்கு தகுதி பெறும் இரண்டாவது இந்திய வீராங்கனை என்ற பெருமையை பி.வி.சிந்து பெற்றுள்ளார். இதற்கு முன்னர், 2012, லண்டன் ஒலிம்பிக்ஸில், சாய்னா நேவால், அரையிறுதிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

 

  • அரையிறுதியில் ஜப்பானின் நொஜோமி ஒகுஹராவை, வருகின்ற வியாழன் அன்று எதிர்கொள்கிறார் சிந்து. அந்த போட்டியில் சிந்து வெல்லும்பட்சத்தில், தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் இந்தியாவிற்கு உறுதி செய்யப்படும். அதில் அவர் தோல்வியடையும் பட்சத்தில், மற்றொரு அரையிறுதியில் தோற்கும் வீரருடன் வெண்கலப் பதக்கத்திற்கு சிந்து போட்டியிட வேண்டும்.