முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

Image result for national pension scheme

 

  • 2003 ஜூலை 14 அன்று தொடங்கப்பட்ட 2003 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம், 2014 ஆகஸ்ட் 14 தொடங்கப் பட்ட 2014 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத்திட்டம் ஆகியவற்றுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியது.
  • 2003-04 முதல் 2004-15 வரை 2003 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்திற்கு ஆயுள் காப்பீட்டுக் கழகத் திற்கு வழங்கப்பட்ட மானியத் தொகை செலவினத்திற்கான ஒப்புதலையும் மத்திய அமைச்சரவை வழங்கியது. 2015-16 நிதி ஆண்டு முதல் 2003 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம், 2014 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம் ஆகியவற்றுக்கு ஏற்படும் இத்தகைய செலவினத்திற்கும் ஒப்புதல் வழங்கியது.
  • இந்தத் திட்டங்கள் இந்திய ஆயுள் காப்பீட்டுக்கழகத்தினால் செயல்படுத்தப் படுகின்றன. இந்த திட்ட நிதியங்களில் முதலீடு செய்யப்படும் தொகைகள் மீது இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் சம்பாதிக்கும் தொகைக்கும் இந்தத் திட்டங்களுக்கு அரசு உறுதி அளித்துள்ளசெலுத்து தொகைகளுக்கும் உள்ளவேறுபாடு மானியமாக ஆயுள் காப்பீட்டுக்கழகத்துக்கு வழங்கப்படுகிறது.
  • இந்த 2 திட்டங்களும் மூத்த குடிமக்களுக்கு அவர்கள் செலுத்திய தொகைகளுக்கு உறுதி அளிக்கப்பட்ட குறைந்தபட்ச வட்டித் தொகை என்ற அடிப்படையில் உறுதியான குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்குவதற்காக ஏற்படுத்தப் பட்டவை. தொகை செலுத்திய தேதி யிலிலிருந்து பாலிலிசிதாரர் மரணம் அடையும் வரை ஓய்வூதியம் வழங்கப்படும். பாலிசிதாரர் மரணத்திற்குப் பிறகு அவரால் நியமிக்கப்பட்டவருக்கு செலுத்தப்பட்ட வைப்புத் தொகை திருப்பி வழங்கப்படும்.
  • இந்த 2 திட்டங்களும் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. எனினும் இந்த பாலிலிசியைபெற்றவர்களுக்கு அரசு உறுதி அளித்த9 சதவீத வட்டித் தொகை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது. 2014 வரிஷ்டா ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டம் 2014 ஆகஸ்ட் 14-ஆம் தேதி முதல் 2015 ஆகஸ்ட் 14 -ஆம் தேதி வரை அமலில் இருந்தது.31, மார்ச் 2016 நிலவரப்படிமொத்தம் 3,17,991 பாலிலிசிதாரர்கள்இந்த திட்டத்தினால் பயன்பெற்றனர்.

அதே தேதி நிலவரப்படி 2003 முதியோர் ஓய்வூதியக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2,84,699 பேர் பாலிலிசி பெற்று பயனடைந்து வருகிறார்கள்