தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்

Respiration In Plants And Animals

 • தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்
 • மனித சுவாசம்
 • விலங்குகளின் சுவாசம்

தாவரங்கள் மற்றும் விலங்குகள் சுவாசித்தல்

 • நாம் உணவிலிருந்து ஆற்றலை பெறுகிறோம் நாம் உட்கொண்ட உணவு சுவாசித்தலின்போது உயிர்வளியுடன் (ஆக்ஸிஜன்) இணைந்து வேதியியல் மாற்றமடைந்து ஆற்றலாக வெளிப்படுகிறது. எனவே சுவாசித்தல் என்பது உயிரினங்களின் முக்கிய நிகழ்வாகும்.
 • சுவாசித்தலின் போது உயிர்வளி நுரையீரலுக்கு கடத்தப்பட்டு இரத்தத்துடன் கலக்கப்படுகின்றது. உயிர்வளி கலந்த இரத்தம் உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று பின் அனைத்து செல்களுக்கும் சென்றடைகிறது.
 • உயிர்வளி செல்களின் உள்ளே சென்று அடையும் பொழுது சக்திப் சுவாசித்தலின் வகைகள்

சுவாசித்தல் இருவகைப்படும்

 • காற்று சுவாசம்
 • காற்றில்லா சுவாசம்

காற்று சுவாசம்

 • பெரும்பாலான உயிரினங்களில் உயிர்வளியின் உதவியால் உணவுப் பொருட்கள் எரிக்கப்பட்டு ஆற்றலை வெளிகொணர்கின்றன. எனவே உயிர்வளியின் முன்னிலையில் நடைபெறும் சுவாசத்திற்கு காற்று சுவாசம் என்று பெயர்

இதன் சமன்பாடு பின்வருமாறு

 • குளுக்கோஸ் + உயிர்வளி கரியமில வாயு + நீர் + ஆற்றல்

 காற்றில்லா சுவாசம்

 • சில நுண்ணுயிரிகள், ஈஸ்ட், பாக்டீரியா போன்றவை உயிர்வளி அற்ற நிலையில் உணவிலிருந்து ஆற்றலைப் பெறுகின்றன. எனவே உயிர்வளி அற்ற நிலையில் நடைபெறும் சுவாசத்திற்கு காற்றில்லா சுவாசம் என்று பெயர். நம் எலும்புத் தசைகளில் காற்றில்லா சுவாசம் நடைபெறுகிறது.
 • ஈஸ்ட் என்பது ஒரு செல் பூஞ்சை ஆகும். காற்றில்லா சூழ்நிலையில் சுவாசம் நடைபெற்று ஆல்கஹாலை உற்பத்தி செய்கின்றன. ஆகவே மதுபான தயாரிப்பில் இவை பயன்படுகின்றன.

சுவாசத்தின் இருவகைகள்

 • காற்றில்லாச் சுவாசம்
 • காற்றுச் சுவாசம்
 • உயர் தாவரங்கள் காற்றுச் சுவாச முறையில் சுவாசம் செய்கின்றன
 • ஈஸ்டு மற்றும் பாக்டீரியா காற்றில்லா முறையில் சுவாசம் செய்கின்றன

 

Click Here to Download