Study Materials

அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்

  • சட்டங்கள் இயற்றும்போதும் அவற்றை நடைமுறைப்படுத்தும் போதும் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் கொண்ட தொகுப்பே அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்எனலாம்.

 

  • இந்திய அரசியலமைப்பு முகவுரையில் குறிப்பிட்டுள்ள சமய, பொருளாதார, அரசியல், நீதி, சமத்துவம், சுதந்திரம், ஒற்றுமை, ஒருமைப்பாடு, சகோதரத்துவம், தனிமனித கண்ணியம் ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு வழிகாட்டவல்ல கொள்கைகளாக அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் திகழ்கின்றன.

 

  • இந்திய அரசியலமைப்பின் நான்காம் பாகத்தில், அரசாங்கம் சட்டம் இயற்றும் பொழுது பின்பற்ற வேண்டிய அறநெறிக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டுள்ளன.

 

  • பிரெஞ்சுப் புரட்சியின் மானிட உரிமைப் பிரகடனம், அமெரிக்க விடுதலைப் பிரகடனம், அயர்லாந்து அரசியலமைப்பு, காந்தியக் கொள்கைகளின் தாக்கத்தினால் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் உருவாயின.

 

  • இந்திய அரசியலமைப்பில் நான்காவது பகுதியில் “36 முதல் 51 விதிகள்வரை உள்ள பகுதியில் அரசு நெறிமுறைக் கோட்பாடுகள் இடம் பெற்றுள்ளன.

 

  • அடிப்படை உரிமைகளுக்கு நீதிமன்ற உத்தரவாதம் இருக்கும்போது, அறநெறிக் கோட்பாடுகளுக்குத் தார்மீக உத்தரவாதம் மட்டுமே உள்ளன. இன்றைய நிலையில் அறநெறிக் கோட்பாடுகள் அதிக முக்கியத்துவம் பெற்று வருகின்றன.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

 

 

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker