ஒளிவிலகல் | tnpsc study materials

maanavan physics

  • ஒளிக்கதிர் அடர்குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினுள் செல்லும் போது செங்குத்துக் கோட்டை நோக்கி விலகிச் செல்லும்.
  • ஒளி ஒர் ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்குச் செல்லும் போது தனது நேர்கோட்டுப்பாதையை விட்டு விலகிச் செல்லும் பண்பே ஒளிவிலகல்எனப்படும்.
  • ஒளிமுறிவு அல்லது ஒளி விலகல் என்பது ஒளியின் வேகத்தில் ஏற்படும் மாற்றத்தால் ஏற்படும் ஒளிசெல்லும் திசையிலிருந்தான விலகல் ஆகும்.
  • இது பொதுவாக ஓர் ஊடகத்தில் இருந்து வேறான அடர்த்தியுடைய பிறிதோர் ஊடகத்துள் ஒளி செல்லும் போது பார்க்கக்கூடியதாக இருக்கும்.
  • ஒளி முறிவுகளைப் பொதுவாகப் பார்க்கக்கூடியதாக இருப்பினும், எந்தவொரு அலையும் ஓர் ஊடகத்திலிருந்து பிறிதொரு ஊடகத்துள் செல்லும்போது முறிவடையும். எடுத்துக்காட்டாக ஒலி அலைகள்.
  • ஒருவர் நேரான பென்சிலோ அல்லது பேனாவை போன்ற நேரான பொருள் ஒன்றை பகுதி அளவு நீர் உள்ள கண்ணாடி அல்லது ஒளிபுகக்கூடிய கிண்ணமொன்றில் வைத்தால் அப்பொருளானது நீர் உள்ள இடத்தில் வளைந்து காட்சியளிக்கும். இது நீரில் இருந்துவரும் ஒளிக்கதிர்களானது முறிவடைவதால் ஏற்படுவதாகும். இது உண்மையாக இருப்பதை இட பார்வைக்கு குறைந்த ஆழத்தில் இருந்து வருவதைப் போன்று தோற்றமளிக்கும். இவ்வாறு தோன்றுவது தோற்ற ஆழம் என்றழைக்கப்படும்.
  • ஒளியானது ஒரு ஊடகத்திலிருந்து அதனிலும் வேறான அடர்த்தியுடைய இன்னொரு ஊடகத்துள், இரண்டு ஊடகங்களில் [எல்லைக்கு] இடை முகத்துக்குச் செங்குத்தாக அல்லாமல் இன்னொரு கோணத்தில் நுழையும்போது அதன் நேர்கோட்டுப் பாதையை விட்டுத் திசை மாறிச் செல்வது ஒளி முறிவு (refraction) அல்லது ஒளிவிலகல் எனப்படும்.
  • ஒளித்தெறிவே வானவில்லின் தோற்றத்திற்கு ஆதாரம் ஆகும் இங்கு சூரிய ஒளிக்கதிர்களை அரியம் போன்று பிரிப்பதனாலேயே அழகிய நிறங்கள் வானத்தில் தோன்றுகின்றன. பார்க்கப்படும் நிறங்களின் வேறுபாடே அதிர்வெண்ணின் வேறுபாட்டல் ஏற்படுவதாகும்.
  • வானவில் போன்றே பல்வேறு விசித்திரமான சம்பவங்களும் ஒளிமுறிவினால் ஏற்படுகின்றது. இவற்றுள் கானல் நீர் குறிப்பிடத்தக்கது. இவை வளியின் ஒளிமுறிவுச் சுட்டியானது வெப்பத்துடன் மாறுபடுவதால் ஏற்படுவதாகும்.

 

ஒளிவிலகல் எண் μ:

  • காற்று அல்லது வெற்றிடத்திலிருந்து பிறிதொரு ஊடத்துத்துள் ஒளி செல்லும் போது, அதன் திசைவேகம் எவ்வளவு குறைகின்றது என்பதன் குறியீடாக அவ்வூடகத்தின் ஒளிவிலகல் எண் அமைகின்றது.
Click Here To Get More Details
No Comments

Sorry, the comment form is closed at this time.