வேளாண்மையில் குறைவான உற்பத்தித் திறனுக்கான காரணங்கள்

Deal Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

  1. பொதுக் காரணங்கள்:
  • மக்கள் தொகை மித மிஞ்சிய அளவில் பெருகி வருவதால் நிலத்தைச் சார்ந்து வாழ்பவர்களின் எண்ணிக்கையும் பெருகுகிறது. இதனால் நில உடைமையில் மாற்றங்கள் ஏற்பட்டு, நிலங்கள் சிறுசிறு துண்டுகளாகப் பிரிக்கப்படுகின்றன.
  • இதனால் தலாவீதம் கிடைக்கக் கூடிய நிலத்தின் அளவு சிறியதாகின்றது. மறைமுக  வேலையின்மையும் ஏற்படுகின்றது. வேளாண்மை உற்பத்தித் திறன் குறைவதைத் தடுப்பதற்கு மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவது ஒன்றே சிறந்த வழியாகும்.
  1. நிறுவன காரணங்கள்
  • இந்தியாவின் நிலங்கள் சிறுசிறு பிரிவுகளாகத் துண்டாடப்படுவதால் சராசரி நில உடைமையின் அளவு மிக்க்குறைவாக உள்ளது. நாட்டுப்புறப்பகுதிகளில் பெரும்பாலும் நிலங்கள் உரிமையாளர்களால் நேரடியாகப பயிரிடப்படுவதில்லை. குத்தகையாளர்களே நிலங்களைப் பயிரிடுகின்றனர்.
  • அவர்களுக்கு நிலத்தை மேம்படுத்துவதில் அக்கறையும் ஆர்வமும் இருப்பதில்லை. நில உரிமையாளர் அருகில் இல்லாமலிருப்பது, நியாயமற்ற குத்தகைத் தொகை, குத்தகை நிரந்தரமின்மை ஆகியன குத்தகையாளர்களின் ஆர்வமின்மைக்குக் காரணங்களாகும்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]