Education News

ரயில்வே(RRB) தேர்வுகளை தமிழில் எழுதலாம் என ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது

Railway Exams Can Write In Tamil

ரயில்வே தேர்வுகளை தமிழில் எழுதலாம்
  • ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ (GDCE) தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஜிடிசிஇ தேர்வுகளை ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தலாம் என்ற அறிவிப்பு வெளியாகியிருந்த நிலையில் ரயில்வே வாரியம் விளக்கமளித்துள்ளது.
  • ரயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டித் தேர்வை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தேவையில்லை என்றும், ஆங்கிலத்திலும், இந்தியிலும் மட்டுமே நடத்தினால் போதும் என ரயில்வே வாரியம் கடந்த சில நாட்களுக்கு முன் அறிவித்திருந்தது. இதேபோன்ற ஒரு அறிவிப்பை தபால்துறை அறிவித்திருந்த நிலையில் தமிழ் உள்பட மாநில மொழிகளிலும் போட்டி தேர்வை எழுதலாம் என தபால் துறை பணிந்தது  இந்த நிலையில் ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தலாம் என ரயில்வே வாரியம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது.
  • ரயில்வேயில் துறை சார்ந்த ஜிடிசிஇ தேர்வு கேள்வித்தாளை ஆங்கிலம், இந்தியில் மட்டும் தயாரிக்க பிறப்பித்த உத்தரவுக்கு பெரும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது
  • அதைத் தொடர்ந்து ரயில்வே போர்டு இணை இயக்குனர் டி. ஜோசப் இன்று வெளியிட்டுள்ள உத்தரவின் நகல் கீழே தரப்பட்டுள்ளது. (No.E(NG)I/2018/PM 1/4, New Delhi, dated September 9, 2019, Language of Question Papers for GDCE – Clarification,) 
  • இந்த உத்தரவு பிராந்திய மொழிகளில் ரயில்வேயில் துறைசார்ந்த GDCE தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட அந்தந்த மாநில மொழிகளில் நடத்தலாம் என்பதை உறுதி செய்துள்ளது.

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Youtube Channel

கிளிக் செய்யவும்

To Join Telegram Channel

கிளிக் செய்யவும்

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker