ரயில்வே பட்ஜெட் 2015-16

Deal Score+1

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

ரயில்வே பட்ஜெட் 2015-16

Railway Budget 2015-16

 • ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது முதல் ரயில்வே பட்ஜெட்டை பிப்ரவரி 26, 2015 அன்று சமர்ப்பித்தார். அவரது பட்ஜெட் டில் புதிய ரயில்களோ, புதிய வழித்தடங்கள் பற்றிய அறிவிப்போ இடம் பெறவில்லை.
 • 2015-16-இல் 6,608 கிலோமீட்டர் தூரம் இருப்புப் பாதைகள் மின்வசதி செய்யப்பட்டு, ரயில்கள் மின்சாரத்தில் ஓட வசதிசெய்யப் படுமென்றார். அதற்கென அரசு ரூ. 96,182 கோடி செலவிட உள்ளதாகக் கூறியுள்ளார்.
 • ரயில் பயணத்தை எளிதாகவும் வசதியா கவும் மாற்ற, ரயில் பயண நேரம் குறித்த குறுஞ்செய்தி எச்சரிக்கை வசதிகள், 400 “பி’ வகை ஸ்டேஷன்களில் வை-பை வசதி, மேல் படுக்கைக்கு பயணிகள் ஏற வசதியாக ஏணி வசதி செய்யப்படும்.
 • ரயில்களில் 17,000 பயோ-டாய்லட் வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 • பெண் பயணிகளின் பாதுகாப்புக்கென ரயில்களில் கேமரா வசதி.
 • நான்கு மாதங்கள் முன்பாகவே முன்பதிவு செய்யும் வசதி.
 • இத்தகைய பயணிகளுக்கு உதவும் வசதிகளைச் செய்ய பயணிகள் வசதிக்கான நிதி 67 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
 • அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள், இந்திய ரயில்வேயை மேம்படுத்த ரூ. 8.5 லட்சம் கோடி முதலீடு தேவையென அமைச்சர் கூறியுள்ளார்.
 • ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க நிலக்கரி, இரும்புத்தாது உள்ளிட்ட பொருட் களுக்கான சரக்குக் கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளது. இதன்மூலம் ரயில்வேக்கு ரூ. 4,000 கோடி கூடுதலாக வருவாய் வருமென எதிர்பார்க்கப்படுகிறது.
 • மும்பை-அகமதாபாத், சென்னை-மைசூர் வழித்தடங்களை அதிவேக வழித்தடங்களாக மாற்றுவதற்கு ரூ. 63,180 கோடி நிதி தேவையென மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு திட்டங்களும் உரிய நிதி திரட்டப்பட்டதும் தொடங்கப்படும்.
 • விவசாயிகள் பயிரிடுதல் மற்றும் சந்தைப் படுத்துதல் தகவல் மையங்களைப் பார்வையிட கிஸான் யாத்ரா எனும் திட்டம் அறிமுகப் படுத்தப்பட உள்ளது.
 • ஸ்மார்ட் போன் மூலம் பதிவுசெய்யப் படாத பயணச்சீட்டை பெறும் வசதியைச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
 • பயணிகள் ஐ.ஆர்.சி.டிசி. வலைத்தளத்தில் பயணச்சீட்டை முன்பதிவு செய்யும்போது உணவு, ஒருமுறை பயன்படுத்தி தூக்கியெறியும் படுக்கை விரிப்பு வசதிகளையும் ஆர்டர் செய்யும் வசதியையும் அறிமுகப்படுத்தஉள்ளது.
 • மேற்சொன்ன மற்றும் இன்னபிற வசதிகளைச் செய்ய கிட்டதட்ட 5,000 கோடி ரூபாய் ஐ.டி. துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
 • மாற்றுத்திறனாளிகள், ஒரேயொரு முறை பதிவு செய்துகொண்டால், பின் தொடர்ந்து இ-டிக்கெட் பெறுவதற்கென சிறப்புத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.