Purananuru | TNPSC | TET Study Materials | புறநானூறு
Review Score+2

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

  • தமிழரின் வாழ்வியல் சிந்தனை களைக் கருலூலமாகக் கொண்டு விளங்கும் நூல் – ”புறநானூறு”
  • புறநானூறு என்னும் தொகைநூல் நானூறு பாடல்களைக் கொண்ட புறத்திணை சார்ந்த ஒரு சங்கத் தமிழ் நூலாகும்.
  • புறம், புறப்பாட்டு என்றும் வழங்கப்படும். இது சங்க காலத் தமிழ் நூல் தொகுப்பான எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
  • இந்நூலைத் தொகுத்தவர் பெயரும் தெரியவில்லை. பாக்களின் அடி வரையறை 4 அடி முதல் 40 அடி வரை உள்ளன.
  • புறநானூற்றின் பாடல்கள் சங்ககாலத்தில் ஆண்ட அரசர்களைப் பற்றியும் மக்களின் சமூக வாழ்க்கை பற்றியும் எடுத்துரைக்கின்றன.
  • இதனை ஜி.யு.போப் அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
  • இந்நூலில் அடங்கியுள்ள பாடல்கள் பல்வேறு காலங்களில் பாடப்பட்டவை.
  • அகற்பா வகையைச் சேர்ந்த இப்பாடல்கள், 150-க்கும் மேற்பட்ட புலவர்களால் எழுதப்பட்டவை. இவர்கள் அனைவரும் ஒரே சமூகத்தையோ நாட்டையோ சார்ந்தவர்கள் அல்ல.
  • அரசன் முதல் எளிய குயவன் மகள் வரை பல்வேறு நிலைகளில் இருந்த ஆடவரும் பெண்டிருமான புலவர்கள் பாடியுள்ளனர்.
  • புலவர் அரசர்களைப் பாடியதை ”அவனை அவர் பாடியது” என்று சொல்வதன் மூலம் புலவர்களுக்கிருந்த செல்வாக்கும் மதிப்பும் புலனாகிறது.
  • கபிலரை ஆதரித்தவன் பாரி,
  • ஔவையாரை ஆதரித்தவன் அதியமான்,
  • பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன்,
  • மாங்குடி மருதநாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன், பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன் போன்ற விவரங்களையும் இது குறிப்பிடுகிறது.
  • அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது சென்றவர் ஔவையார், கோப்பெருஞ்சோழனுக்காக அவன் மகனிடம் தூது சென்றவர் எயிற்றியனார்,

 

Click Here To Get More Details