Review Score0

06mar_TH_Music-_07_2333854f

  • தமிழில் தோன்றியுள்ள புராண நுால்களைப் புராணக் காப்பியங்கள் எனவும் புராணங்கள் எனவும் இரண்டாகப் பகுக்கலாம்.
  • வடமொழியிற் காணப்படும் பதினெண் புராணங்களைப் போல இவை தனிவகையாகப் பல்கின.
  • தலபுராணங்கள் இவ்வகையைச் சாரும்.

திருவிளையாடற் புராணம்

  • கல்லாடம், சுந்தர பாண்டியம் முதலிய நுால்கள் திரு விளையாடல் பற்றிய முன்னைய நுால்கள் எனலாம்.
  • மதுரைத் தலத்தின் பெருமை பற்றியும் அங்குள்ள இறைவனின் பெருமை பற்றியும் பேசுவதால் இஃது ஒரு தலபுராணமேயாகும்.
  • தமிழகம் பற்றியதாயினும் எல்லா நுால்களுக்கும் வடமொழி மூலம் மொழியப்படுவதுபோல, இதற்கும் ஆலாசிய மகாத்துமியத்தின் மொழிபெயர்ப்பென்றும் ஈச சங்கிதையில் உள்ள திருவாலவாய் மான்மியத்தின் வழிப்பட்டதென்றும் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன.
  • முதலில் தோன்றிய நுால் வேம்பத்துாரார் திருவிளையாடல் என்று கூறப்படும். செல்லி நகர்ப் பெரும்பற்றப் புலியுர் நம்பி 13 ஆம் நுாற்றாண்டில் திருவாலவாயுடை யார் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் இதனை எழுதினார்.
  • பின்னர் பதினாறாம் நுாற்றாண்டில் பரஞ்சோதி முனிவர் நான்கு காண்டம், 68 படலம், 3393 பாடல்கள் கொண்ட திருவிளையாடற் புராணத்தை எழுதினார்.
  • இதன்கண் ஆலவாய்ச் சொக்கராம் சோமசுந்தரப் பெருமானின் 64 திருவிளையாடல்கள் கூறப்படுகின்றன.
  • சொற்சுவையும் பொருட்சுவையும் மிக்க இந்நுால் தோன்றிய பின், இக்கதை தொடர்பான முன்னைய நுால்கள் செல்வாக்கு இழந்தன.
Click Here To Get More Details