புணர்ச்சி | punarchi

Deal Score+3

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

tamil-grammar

 • நிலைமொழியின் ஈறும் வருமொழியின் முதலும் சேருவது புணர்ச்சியாகும்.
 • அவ்வாறு சேரும்பொழுது எவ்வித மாற்றமின்றி இயல்பாகப் புணர்வது இயல்பு புணர்ச்சியென்றும் மாற்றம் ஏற்பட்டுப் புணர்வது விகாரப் புணர்ச்சி என்றும் கூறப்படும்.

புணர்ச்சிஇயல்புவிகாரம்

 • நிலைமொழியும் வருமொழியும் சேரும் போது எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லையென்றால் அது இயல்புப்புணர்ச்சி ஆகும்.
 • பொன்+வளையல் = பொன் வளையல் இணையும் இருசொற்களில் முதல் சொல் நிலைமொழி எனப்படும்.
 • நிலைமொழியின் இறுதி எழுத்துப் புள்ளியாக(மெய்யாக) இருந்தால் அதை மெய்யீறு எனக் கூறுவர்.
 • நிலைமொழியின் இறுதி எழுத்து உயிர் மெய்யாக இருந்தால் அவை உயிரீறு எனச் சொல்லப்படும்.
 • வருமொழியின் முதல் எழுத்து உயிர் மெய்யாக இருப்பின் அதை மெய்முதல் என அழைப்பர்.
 • வருமொழியின் முதல் எழுத்து உயிராக இருப்பின் அதை உயிரிமுதல் என அழைப்பர்.
 • நிலைமொழியும் வருமொழியும் சேரும்போது மாற்றங்கள் ஏற்படுமானால் அதனை விகாரப்புணர்ச்சி என்பர்.
 • விகாரப்புணர்ச்சி மூன்று வகைப்படும். அவை: தோன்றல், கெடுதல், திரிதல்.
 • புணர்ச்சி இரண்டு வகைப்படும். அவை: இயல்பு, விகாரம்

வாழை மரம்

 • இத்தொடரில் வாழை என்பது நிலையான சொல். இதனை நிலைமொழி என்பர்.
 • மரம் என்பது வந்து சேர்ந்த சொல். இதனை, வருமொழி என்பர். நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது எவ்வித மாறுபாடும் இல்லாமல் சேருவதை இயல்பு புணர்ச்சி என்பர்.
 • நிலைமொழியும் வருமொழியும் சேரும் பொழுது, ஏதேனும் ஓர் எழுத்துத் தோன்றுதல், இருக்கும் எழுத்துத் திரிதல் அல்லது கெடுதல் ஆகிய மாறுபாடுகள் அடைவதை விகாரப் புணர்ச்சி என்பர்.

 

 • இயல்பு புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டு “இயல்பு புணர்ச்சி” என்ற தொடரே அமையும். இதே போல் விகாரப் புணர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக, “விகாரப் புணர்ச்சி” என்பதே அமைதலையும் காண்க.
 • இவ்வாறு தோன்றல், திரிதல், கெடுதல் என்பன யாவும் சில விதிகளின் படியே அமையும். அவ்விதிகளைப் புணர்ச்சி விதிகள் என்பர்.

[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_self” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]