properties of materials | TNPSC | TET Study Materials

பருப்பொருள்களின் தன்மைகள்

Review Score0

GET THE JOBS UPDATES IN YOUR INBOX

properties of materials

பருப்பொருள்களின் நிலைகள்:

  • பல துகள்கள் சேர்வதால் கிடைக்கும் உருவம் பருப்பொருள் எனப்படும். இதற்கு நிறை, பருமன், நிலைமம் மற்றும் அடர்த்தி ஆகிய தன்மைகள் உள்ளன.
  • எந்த ஒரு பொருளும் மூன்று நிலைகளில் காணப்படுகிறது. அதுவே திண்மம், நீர்ம மற்றும் வாயு நிலைகளாகும்.
  • இம்மூன்று நிலைகளும் வெப்பநிலை உயர்த்தப்படும்பொழுது பருமனளவு அதிகரிக்கின்றன.
  • திண்மமும், நீர்மமும் புறப்பரப்பு கொண்டவை. ஆனால் வாயுக்களுக்கு இல்லை.

திண்மம்:

  • திண்மங்களில் அணு அல்லது மூலக்கூறுகள் மிக நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன. இதற்கு அவற்றிற்கிடையே உள்ள கவர்ச்சி விசையே காரணமாகும். எனவே அவை நிலையான தன்மையைப் பெற்று உறுதியானவையாகவும் வடிவ அமைப்பைப் பெற்றவையாகவும் உள்ளன.
  • திண்மப் பொருள்கள் இருவகைப்படும். அவை:
  1. படிகத் திண்மங்கள் 2. படிக வடிவமற்ற திண்மங்கள்.

படிகத் திண்மங்கள்

  • அணுக்களோ அல்லது மூலக்கூறுகளோ முப்பரிமாண கட்டமைப்பில் அடுக்கப்பட்டுள்ளன.
  • ஒரு பொருளின் கரைசல் ஆவியாதலால் அப்பொருளின் படிகங்கள் உண்டாகின்றன. மேலும் வாயு அல்லது நீர்மம் உறைவதனாலும் படிகங்கள் தோன்றும்.

எ.கா.உலோகங்கள், உப்பு, வைரம்.

 

Click Here To Get More Details