Study Materials

பிரதமர்

  • இந்திய நாடாளுமன்றத்தில் இவர்தான் ஆட்சித்தலைவர்.
  • இவர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.
  • அரசாங்கத்தின் உண்மையான அதிகாரங்களின் உறைவிடம் இவரே.
  • நடைமுறையில் பிரதமர், நாடாளுமன்ற மக்களவையில் அறுதிப் பெரும்பான்மையும் நம்பிக்கையும் பெற்றுள்ள கட்சி, அல்லது கூட்டணிக் கட்சிகளின் தலைவராக இருப்பார்.
  • பிரதம அமைச்சர் அரசாங்கத்தின் உண்மையான தலைவர் அவர்தான் நிர்வாகத்துறையின் தலைவராவார்.
  • இவர் திட்டக்குழுவிற்கும் தேசிய வளர்ச்சிக் குழுவிற்கும் தலைவராக விளங்குகிறார்.
  • Art (75) இந்திய குடியரசுத் தலைவர் இந்தியாவின் பிரதம அமைச்சரை நியமிக்கிறார்.
  • பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுபவர் பாராளுமன்றத்தின் ஏதாவது ஒரு அவையில் உறுப்பினராக சேர்தல் போதுமானது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர் அல்லாதவர் கூட பிரதமராக தேர்வு செய்யப்படலாம் ஆனால் அவர் ஆறு மாத காலத்திற்குள் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் இந்தியாவில் முதன்முறையாக இராஜ்ய சபாவிலிருந்து இந்திரா காந்தி 1966 ம் ஆண்டு பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
  • பிரதமர் மக்களவையின் நம்பிக்கையைப் பெற்றிருக்கும் வரை ஆட்சியில் தொடரலாம்.
  • நாடாளுமன்றத்தையும் நிர்வாகத் துறையையும் ஒரு சேரக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் மிக்கவராக பிரதமர் திகழ்கிறார்.
  • இந்தியாவின் முதல் துணைப் பிரதமர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
[qodef_button size=”medium” type=”” text=”Click Here To Get More Details” custom_class=”” icon_pack=”font_awesome” fa_icon=”” link=”http://tnpsc.maanavan.com/tnpsc-materials/” target=”_blank” color=”white” hover_color=”” background_color=”blue” hover_background_color=”” border_color=”” hover_border_color=”” font_size=”” font_weight=”” margin=””]

Related Articles

Back to top button
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker